/indian-express-tamil/media/media_files/dn6LpqboTaGUcT8xlZ8X.jpg)
ஆதார் பயோமெட்ரிக் கட்டாய அப்டேட் ஏன்? - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விதிமுறைகள், புதுப்பிக்கும் முறை இங்கே!
ஆதார் மற்றும் பயோமெட்ரிக் விவரங்களை இணைப்பதும், அவ்வப்போது தகவல்களைப் புதுப்பிப்பதும் அரசாங்க விதிமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கு இணங்குவதற்கு மட்டுமல்லாமல், போலி ஆதார் தவிர்ப்பதற்கும், பாதுகாப்பு மற்றும் துல்லியத்தை மேம்படுத்துவதற்கும் கட்டாயம் பின்பற்ற வேண்டிய முக்கியமான நடவடிக்கையாகும். ஆதார் பெற, புகைப்படம் எடுக்கப்படும், கண்கள் கருவிழி ஸ்கேன் செய்யப்படும். உங்கள் கைரேகை ஆகியவை வழங்கப்பட வேண்டும். இதன் மூலம் உங்கள் பெயரில், உங்கள் அடையாளத்தில் போலி ஆதார் பெறுவது தடுக்கப்படும்.
ஆதார் பயோமெட்ரிக் என்பது தனிநபரின் தனித்துவ உடல் அம்சங்களைக் குறிக்கிறது. இவை இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) கட்டுப்படுத்தப்படும் ஆதார் தரவுத்தளத்தில் சேகரிக்கப்பட்டு சேமிக்கப்படுகின்றன.
ஆதார் பயோமெட்ரிக் முறைகள்:
i. கைரேகைத் தரவு: ஆதார் பதிவு செய்யும் நடைமுறையில், 10 விரல்களின் கைரேகை அமைப்புகளும் ஸ்கேன் செய்யப்படுகின்றன.> ஒவ்வொரு விரலிலும் உள்ள தனித்துவமான மேடுகள் மற்றும் சுழல்களை படம்பிடிக்கிறது. தனிநபரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதில் இது முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது.
கருவிழி ஸ்கேன் தரவு: ஆதார் பதிவு செய்யும் செயல்பாட்டில் இரு கண்களின் கருவிழி ஸ்கேனும் எடுக்கப்படுகிறது. கண்ணின் வண்ணப் பகுதியான கருவிழியின் உயர் தெளிவுத்திறன் கொண்ட படத்தைப் பிடிக்கிறது. குறிப்பாக வயது, உடல் அல்லது சில மருத்துவ நிலைகள் போன்ற காரணங்களால் கைரேகை ஸ்கேன் செய்வது கடினமாக இருக்கும் சமயங்களில் அடையாளத் துல்லியத்தை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கிறது.
5 और 15 वर्ष की आयु प्राप्त करने पर बच्चों को अपने आधार में #बायोमेट्रिक्स -उंगलियों के निशान, आईरिस और फोटो को अपडेट कराना आवश्यक है। इसे अनिवार्य बायोमेट्रिक अपडेट या एमबीयू के रूप में जाना जाता है। #एमबीयू के कई लाभों को समझने के लिए वीडियो देखें।#WhyMBU#Aadhaar… pic.twitter.com/UMBVZAE8Br
— Aadhaar (@UIDAI) May 16, 2025
கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு எப்போது?
- குழந்தை 5 வயதை எட்டியவுடன் அனைத்து பயோமெட்ரிக் தகவல்களும் (புகைப்படம், கைரேகைகள் மற்றும் 2 கருவிழிகளும்) பதிவு செய்யப்படும். இந்த கட்டத்தில், குழந்தைக்கு நகல் நீக்கம் செய்யப்படும். அசல் ஆதார் எண் தக்கவைக்கப்படும், மேலும் இந்த கோரிக்கை புதிய பதிவு கோரிக்கை போன்றே கையாளப்படும்.
- ஆதார் எண் வைத்திருப்பவர் 15 வயதை அடையும்போது அனைத்து பயோமெட்ரிக்குகளும் (புகைப்படம், கைரேகைகள் மற்றும் இரண்டு கருவிழிகளும்) புதுப்பிக்கப்பட வேண்டும்.
நீங்கள் உங்கள் கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பை அங்கீகரிக்கப்பட்ட ஆதார் பதிவு மையத்தில் மேற்கொள்ளலாம். அதற்கு உங்கள் தனித்துவமான ஆதார் எண்ணுடன் மையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கு, கைரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலம் அங்கீகாரத்தைத் தேர்ந்தெடுத்து, தேவையான பயோமெட்ரிக் தரவுகளை வழங்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.