scorecardresearch

ஆதார்- பான் இணைப்பு: அபராதக் கட்டணம் எப்படி செலுத்துவது?.. மார்ச் 31-க்குப் பிறகு என்ன நடக்கும்?

Aadhaar-PAN Link: மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் கட்டாயம் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Aadhaar-PAN Link
PAN card changes

ஆதார்- பான் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் ஆதார்- பான் எண் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31-ம் தேதி கடைசி தேதியாக அறிவித்துள்ளது. இதை செய்ய தவறும்பட்சத்தில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் அட்டை செயலற்றதாகி விடும் எனவும் எச்சரித்துள்ளது. தற்போது ரூ.1000 அபராதக் கட்டணத்துடன் ஆதார்- பான் இணைக்கப்பட்டு வருகிறது. ஆன்லைனில்
ஆதார்- பான் எவ்வாறு இணைப்பது என்பது குறித்து பார்ப்போம்.

ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் மஹாராஷ்டிரா, கனரா வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, சிட்டி யூனியன் வங்கி, பெடரல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஐடிபிஐ வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி, ஜம்மு & காஷ்மீர் வங்கி , கரூர் வைசியா, கோடக் மஹிந்திரா வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பயனர்கள் கீழ்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றவும்.

  1. வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கம் e-filing இணையதளப் பக்கத்திற்கு செல்ல வேண்டும். (https://www.incometax.gov.in/iec/foportal/)
  2. இதில் இடதுபுறம் உள்ள Quick Links என்ற டேப்பில் “Link Aadhaar” என்பதைக் கொடுக்கவும்.
  3. இப்போது உங்கள் பான் மற்றும் ஆதார் எண்ணை பதிவிடவும்.
  4. அடுத்து Continue to Pay Through e-Pay Tax செலக்ட் செய்யவும்.
  5. இப்போது மீண்டும் ஆதார், பான் எண் மற்றும் உங்கள் மொபைல் எண் கொடுக்கவும்.
  6. உங்கள் மொபைல் எண்ணிற்கு அனுப்பபட்ட ஓ.டி.பி-யை பதிவிட்டவுடன், payment tiles பக்கம் செல்லும்.
  7. Income Tax tile என்ற இடத்தில் Proceed என கொடுக்கப்பட்டிருக்கும் அதைக் கொடுக்கவும்.
  8. அடுத்து AY 2023-24 என்றும் Type of Payment பக்கத்தில் as other Receipts (500) எனவும் கிளிக் செய்யவும்.
  9. இப்போது Others என்ற இடத்தின் கீழ் ரூ.1000 எனக் கொடுக்கப்பட்டிருக்கும், அதை கொடுத்து உங்கள் வங்கி விவரங்கள் கொடுத்து பணம் செலுத்த வேண்டும்.

பணம் செலுத்தியப் பின்னும் சில வழிமுறைகளை செய்ய வேண்டும். அப்போது தான் உங்கள் ஆதார்- பான் இணைக்கப்படும்.

  1. பணம் செலுத்தியப் பின் உங்கள் திரையில் pop-up window வரும், அதில் Link Aadhaar கொடுத்து இணைக்கலாம். அவ்வாறு pop-up window வரவில்லை எனில் மீண்டும் முகப்பு பக்கம் வந்து ‘Link Aadhaar’கொடுக்கவும்.
  2. உங்கள் பெயர், பிறந்த தேதி, பாலினம் என எல்லாம் திரையில் auto-populated ஆகி கொடுக்கப்பட்டிருக்கும்.
  3. உங்கள் ஆதார்- பான் தகவல்களை சரிபார்த்து. எண்டர் கொடுக்கவும். தவறாக இருக்கும் பட்சத்தில் அதை உரிய ஆவணம் கொண்டு திருத்தவும்.
  4. அடுத்து மீண்டும் உங்கள் ஆதார் எண் கொடுத்து “link now” பட்டனை கிளிக் செய்யவும்.
  5. அவ்வளவு தான், உங்கள் ஆதார்- பான் விரைவில் இணைக்கப்படும் என நோட்டிவிக்கேஷன் காண்பிக்கும்.

மார்ச் 31-க்குப் பிறகு என்ன நடக்கும்?

ஆதார்- பான் எண் இணைக்க வருமான வரித்துறை மார்ச் 31-ம் தேதி கடைசி தேதி என அறிவித்துள்ளது. அதன் பிறகு ஏப்ரல் 1-ம் தேதி முதல் பான் எண் செயலற்றதாகி விடும் (Inoperative) எனக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் மார்ச் 31-க்குப் பின்னும் காலம் அவகாசம் நீடிக்கப்படுமா என தெரியவில்லை. இதற்கான வாய்ப்புகள் குறைவு என தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக கடந்தாண்டு மார்ச் 31, 2022-க்குள் அபராதக் கட்டணம் இல்லாமல் ஆதார்- பான் இணைக்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. அதன்பின் தற்போது மார்ச் 31, 2023 வரை ரூ.1000 அபராதத் தொகையுடன் இணைக்க கால நீடிப்பு வழங்கப்பட்டது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Aadhaar pan link fees how to pay and what will happen after march 31

Best of Express