ஆதார் கார்டு மிக முக்கிய அடையாள அட்டையாக உள்ளது. அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனை, விசா உள்ளிட்ட சேவைகள் முதல் ஷாப்பிங் வரை பல்வேறு பயன்பாடுகளுக்கு ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ஆதார் கார்டில் பிரத்யேக எண், பெயர், புகைப்படம், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்நிலையில் ஆதார் கார்டு பெற்று 10 ஆண்டுகள் ஆகிவிட்டால் அதை புதுப்பிக்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உங்கள் ஆதார் கார்டு விவரங்கள் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை புதுப்பிக்கப்பட வேண்டும். ஆன்லைன், ஆப்லைன் மூலமாக ஆதார் கார்டு புதுப்பிக்கலாம். ஜுன் மாதம் வரை ஆன்லைன் மூலமாக புதுப்பிக்கும் விவரங்களுக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் உங்கள் ஆதாரில் புகைப்பட விவரங்கள் அப்டேட் செய்வது குறித்து இங்கு பார்ப்போம். இருப்பினும், முகவரி அப்டேட் மட்டுமே ஆன்லைனில் செய்ய முடியும். பெயர், பிறந்த தேதி, புகைப்படம் மற்றும் பிற விவரங்களை நேரடியாக ஆதார் மையத்திற்கு சென்று தான் அப்டேட் செய்ய முடியும்.
ஆதார் கார்டில் போட்டோ அப்டேட் செய்வது எப்படி?
- ஆதார் பதிவு/திருத்தம்/புதுப்பிப்பு படிவத்தை UIDAI இணையதளத்தில் இருந்து பதிவிறக்கவும்- uidai.gov.in/ பயன்படுத்தவும்.
- படிவத்தை கவனமாக நிரப்பவும்.
- அருகிலுள்ள ஆதார் வேவை மையம், இ-சேவை மையம் அல்லது ஆதார் சேவா கேந்திரா மையத்திற்கு செல்லவும்.
- படிவத்தை நிர்வாகியிடம் சமர்ப்பித்து, சரிபார்ப்பிற்காக உங்கள் பயோமெட்ரிக் விவரங்களை வழங்கவும்.
- நிர்வாகி உங்களை நேரடியாக புகைப்படம் எடுப்பார்.
- புதுப்பிக்கப்பட்ட விவரங்களை அங்கீகரிக்க, உங்கள் பயோமெட்ரிக்ஸை மீண்டும் வழங்க வேண்டும்.
- பின்னர் சேவை கட்டணமாக ரூ.100 வழங்க வேண்டும்.
- அடுத்ததாக விண்ணப்பம் சமர்பிக்கப்பட்ட பிறகு, URN எண் வழங்கப்படும். இதை வைத்து உங்கள் ஆதார் அப்டேட் ஸ்டேட்ஸை தெரிந்து கொள்ளலாம்.
குறிப்பாக இந்த அப்டேட் உங்கள் குழந்தைக்கு 5 வயதாக இருக்கும் போது அல்லது 15 வயதிற்குட்பட்ட போது ஆதார் எடுக்கப்பட்டிருந்தால் 10 ஆண்டுகளுக்குப் பின் கட்டாயம் ஆதார் அப்டேட் செய்யப்பட வேண்டும். 15 வயது ஆன பின் ஆதார் அப்டேட் செய்ய வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“