ஆதார் மிக முக்கிய அடையாள அட்டையாகும். பாஸ்போர்ட் எடுப்பது முதல் ஷாப்பிங் வரை அனைத்திற்கும் ஆதார் தேவை.
அந்த வகையில் ஆதாரை தவறாகப் பயன்படுத்தினால் அல்லது பயன்படுத்த முயற்சித்தால் அது ஆதார் சட்டம், 2016 (திருத்தப்பட்ட) கீழ் கிரிமினல் குற்றம் ஆகும்.
இதுகுறித்து, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) கூறுகையில், பதிவின் போது தவறான தகவல்கள் அல்லது தவறான பயோமெட்ரிக் தகவலை வழங்குதல் தவறாகும் குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஆதார் எண் வைத்திருப்பவரின் பயோமெட்ரிக் தகவல்களை மாற்றுவதன் மூலம் அல்லது மாற்ற முயற்சிப்பதன் மூலம் ஆதார் எண் வைத்திருப்பவரின் அடையாளத்தை தவறாகப் பயன்படுத்துதல் - 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கலாம்.
குடியிருப்பாளரின் அடையாளத் தகவலைச் சேகரிக்க அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சியைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது குற்றமாகும். இதற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை. அதே நேரம் அந்த ஏஜென்சிக்கு ரூ. 1 லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டும். சிறை தண்டனையும் விதிக்கப்படலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.