Aadhaar card update latest tamil news: கொரோனா தொற்று குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், தற்போது அதன் 2ம் அலை உருவாகியுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஊரடங்கு விதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் உங்களுடைய ஆதாரில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆதார் உதவி மையத்தை அணுகுவது சிரமான ஒன்றாக இருக்கும். எனவே தான் ஆதார் வழங்கும் ஆணையம், வீட்டில் இருந்தபடியே உங்களுடைய ஆதரில் இருக்கும் சிக்கல்களை அப்டேட் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது. இந்த புதிய அப்டேட் மூலம் ஆன்லைனில் உங்களுடைய பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் மொழி போன்ற விவரங்களை எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
உங்கள் ஆதார் அட்டையைப் ஆன்லைனில் புதுப்பிபதற்கான படிகளை இங்கு வழங்கியுள்ளோம்.
முதலில் ஆதார் அட்டை வழங்கும் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தள பக்கமான uidai.gov.in - ஐ பார்வையிடவும். அதில் ‘மக்கள்தொகை தரவைப் புதுப்பித்தல்’ (Update Demographic Data) என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். இப்போது அதில் உங்களுடைய ஆதார் எண் மற்றும் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் போன்றவற்றை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
பின்னர் ‘மக்கள்தொகை தரவைப் புதுப்பித்தல்’ (Update Demographic Data) என்ற விருப்பத்திற்கு செல்லவும். இப்போது பெயர், முகவரி, பிறந்த தேதி, மொபைல் எண், மொழி, பாலினம் மற்றும் மின்னஞ்சல் போன்ற விருப்பங்கள் தோன்றும். அதில் நீங்கள் புதுப்பிக்க விரும்பும் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து உங்கள் விவரங்களையும் மாற்றங்களையும் நிரப்பவும்.
அதன் பிறகு உங்களுடைய ஐடி ஆதாரத்தை அதில் பதிவேற்றவும். அதில் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு அல்லது நெட் பேங்கிங் மூலம் ரூ .50 ஆன்லைனில் பணம் செலுத்துங்கள். உங்களுடைய தரவுகள் உறுதி செய்யப்பட பின்னர், உறுதிப்படுத்தலுக்கான யுஆர்என் குறியீடு உங்களுடைய மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். அந்த உறுதிப்படுத்தல் குறியீடு மூலம், புதுப்பித்தல் செயல்முறையை நீங்கள் கண்காணிக்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.