ஆதார் அப்டேட்: உங்க வீட்டு அட்ரஸ் மாத்திட்டீங்களா? இப்படி அப்டேட் பண்ணுங்க!

How to update the address in Aadhaar card via online Tamil News: எந்தவொரு ஆவணங்களும் இல்லாமால், உங்கள் வீட்டில் இருந்தபடியே தற்போதைய முகவரியை புதுப்பித்து கொள்ளும் வசதியை, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கியுள்ளது.

Aadhar Address update Tamil News: how to update the address in Aadhaar card via online

Aadhar Address update Tamil News: நீங்கள் பணிமாற்றம் அல்லது எதோ ஒரு முக்கிய காரணங்களுக்காக வேறு ஒரு வீட்டிற்கு மாறி இருப்பீர்கள். அதனால் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை எப்படி அப்டேட் செய்வது என்று ஒரு கட்டத்தில் குழம்பி இருப்பீர்கள். அதை பற்றிய கவலையை விடுங்கள். நீங்கள் மாறி இருக்கும் முகவரியை இப்போது வீட்டில் இருந்தே அப்டேட் செய்யலாம். அதோடு எந்தவொரு ஆவணங்களும் இல்லாமலேயே உங்கள் தற்போதைய முகவரியை புதுப்பித்து கொள்ளும் வசதியை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) வழங்கியுள்ளது.

யுஐடிஏஐ (UIDAI) இன் புதுப்பிப்புகளின்படி, முகவரி சரிபார்ப்பவரின் உதவியுடன், ஆன்லைனில் முகவரி சரிபார்ப்புக் கடிதத்தை அனுப்புவதன் மூலம் ஆதார் அட்டையில் முகவரியைப் புதுப்பிக்க முடியும். மற்றும் முகவரி சரிபார்ப்பவர் எந்த குடும்ப உறுப்பினர், நண்பர், நில உரிமையாளர், அந்த முகவரியைப் பயன்படுத்த உங்களை அனுமதிக்கிறது. ஆனால் இதற்கு நீங்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே உங்கள் முகவரியை புதுப்பிக்க முடியும்.

அவை என்னென்ன நிபந்தனைகள் என்று கீழே பார்ப்போமா!

1) குடியுரிமை மற்றும் முகவரி சரிபார்ப்பவரின் தொலைபேசி எண்ணை அந்தந்த ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும்.

2) தொலைபேசியில் அனுப்பப்படும் ஒரு முறை கடவுச் சொல் மூலம் (OTP) மூலம் குடியிருப்பாளர் மற்றும் முகவரி சரிபார்ப்பு அங்கீகரிக்கப்படும்.

3) மேலும், முகவரி தளத்தில் பயன்படுத்த முகவரி சரிபார்ப்பு அங்கீகரிக்கப்பட வேண்டும்.

இப்போது ஆதார் அட்டையில் முகவரியை எவ்வாறு புதுப்பிப்பது என்பது பற்றி இங்கு பாப்போம்.

1) முதலில் நீங்கள் ஆதார் வழங்கும் யுஐடிஏஐ-யின் (UIDAI) வலைத்தள பக்கமான https://uidai.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும். பிறகு அதில் ‘எனது ஆதார்’ மெனுவில் உள்ள ‘முகவரி சரிபார்ப்பு கடிதம்’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.

2) இதற்குப் பிறகு, முகவரி சரிபார்ப்பு கடிதம் பக்கத்திற்கான கோரிக்கையைப் பெறுவீர்கள். அங்கு உங்கள் 12 இலக்கங்களை உள்ளிடலாம் அல்லது உங்களின் விர்ச்சுவல்16 இலக்கங்கள் கொண்ட ஐடியை உள்ளிடவும்.

3) கேப்ட்சாவை நிரப்பிய பின்னர் ‘சென்ட் ஓடிபி’ (send OTP) என்பதை கிளிக் செய்யவும்.

4) பின்னர் ‘உள்நுழை’ பதிவுசெய்த மொபைலில் OTP கிடைக்கும். இப்போது நீங்கள் ஆதார் எண்ணைக் கொண்டிருக்க வேண்டிய முகவரி சரிபார்ப்பின் விவரங்களை நிரப்ப வேண்டும்.

5) இதற்குப் பிறகு, முகவரி சரிபார்ப்புக்கு ஒரு எஸ்எம்எஸ் கிடைக்கும். அதில் ஒரு இணைப்பு இருக்கும், எனவே அதற்கு ஒப்புதல் தேவைப்படும்.

6) இதற்குப் பிறகு, OTP உடன் இரண்டாவது எஸ்எம்எஸ் பெறப்படும், அதை நிரப்பி கேப்ட்சாவைச் உள்ளிட்டு சரிபார்க்கவும்.

7) இது சரிபார்க்கப்பட்டதும், எஸ்எம்எஸ் மூலம் சேவை கோரிக்கை எண் (எஸ்ஆர்என்) கிடைக்கும்.

8) ‘எஸ்.ஆர்.என்’ மூலம் உள்நுழைந்து முகவரியை முன்னோட்டமிட்டு, அதைத் திருத்தி சமர்ப்பிக்கவும். உங்கள் ‘புதுப்பிப்பு கோரிக்கை எண்’ (யுஆர்என்) ரத்து செய்யவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhar address update tamil news how to update the address in aadhaar card via online

Next Story
அளவான சைஸ்; மழையில் நனையாது… ரூ50 கொடுத்து பிவிசி ஆதார் கார்டு வாங்குங்க!Aadhar update Tamil News: How to get PVC Aadhar card in tamil
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com