அளவான சைஸ்; மழையில் நனையாது… ரூ50 கொடுத்து பிவிசி ஆதார் கார்டு வாங்குங்க!

How to get PVC Aadhar card in tamil: இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமான உள்ள ஆதார் அட்டை இப்போது முற்றிலும் புதிய வடிவத்திலும், சிறிய மற்றும் நீடித்துழைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Aadhar update Tamil News: How to get PVC Aadhar card in tamil

Aadhar update Tamil News: இந்தியாவின் மிக முக்கியமான அடையாள ஆவணமான ஆதார் அட்டை உள்ளது. இவை இப்போது முற்றிலும் புதிய வடிவத்திலும், சிறிய மற்றும் நீடித்துழைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய அறிவிப்பின்படி, புதிய ஆதார் அட்டைகள் பாலிவினைல் குளோரைடு (பிவிசி) அட்டைகளாக மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், இவை பணப்பையில் எளிதில் பொருந்தக்கூடிய ஏடிஎம் அட்டைகளைப் போன்றதாகவும் உள்ளது என ஆதார் வழங்கும் ஆணையம் (யுஐடிஏஐ) தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

இவை தவிர, அனைத்து புதிய ஆதார் பி.வி.சி அட்டையிலும் ஹாலோகிராம், கில்லோச் முறை, பேய் இமேஜ் மற்றும் மைக்ரோ டெக்ஸ்ட் போன்ற சமீபத்திய பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்படும். இது முற்றிலும் வானிலை எதிர்ப்பு மற்றும் உடனடியாக ஆஃப்லைனில் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவித்துள்ளது.

இந்த பிவிசி ஆதார் அட்டையை ஆர்டர் செய்ய, யுஐடிஏஐ இரண்டு முறைகளை முன்மொழிந்துள்ளது. இதை யுஐடிஏஐ (UIDAI) வலைத்தள இணைப்பு மூலம் பதிவு செய்யலாம் அல்லது இடுகையுடன் பதிவேற்றிய QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பதிவு செய்யலாம். ரூ .50 செலவாகும் இந்த அட்டை, அனைத்து கட்டணங்களையும் உள்ளடக்கியது, ஸ்பீட் போஸ்ட் மூலம் நேரடியாக வீடுகளுக்கு வழங்கப்படும்.

எளிய வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் புதிய ஆதார் அட்டைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது இங்கு காணலாம்.

படி 1: முதலில் ஆதார் வழங்கும் ஆணையத்தின் இந்த https://residentpvc.uidai.gov.in/order-pvcreprint இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி 2: பிறகு உங்கள் 12 இலக்க ஆதார் அட்டை எண் அல்லது 16 இலக்க மெய்நிகர் ஐடி அல்லது 28 இலக்க ஈஐடியைச் சேர்க்கவும்.

படி 3: அடுத்து, கேப்ட்சா படத்தில் கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்புக் குறியீட்டை உள்ளிட்டு, ‘OTP அனுப்பு’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 4: பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் OTP ஐப் பெற்றதும், கொடுக்கப்பட்ட இடத்தில் அதை நிரப்பி, ‘சமர்ப்பி’ என்பதைக் கிளிக் செய்யவும்.

படி 5: விவரங்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்கள் ஆதார் பி.வி.சி அட்டையின் மாதிரிக்காட்சியைக் காண்பீர்கள்.

படி 6: அடுத்து, கட்டண விருப்பத்தை க்ளிக் செய்தால், கட்டணம் செலுத்தும் பக்கத்தைப் பெறுவீர்கள். ரூ .50, அட்டைக்கான கட்டணமாக செலுத்தவும்

படி 7: கட்டணம் செலுத்தும் செயல்முறை முடிந்தவுடன் உங்கள் ஆர்டர் வைக்கப்படும்

அட்டை நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் ஸ்பீட் போஸ்ட் மூலம் உங்கள் வீட்டிற்கு வழங்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aadhar update tamil news how to get pvc aadhar card in tamil

Next Story
IOS மற்றும் ஆண்டிராய்டுக்கு இடையில் தகவல் பரிமாற்றம் இனி ஈஸி!Whatsapp will soon make it easier to shift between ios and android
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express