ஆரோக்யா சேது அப்டேட்ஸ்.. இந்த புதிய அம்சங்களை கவனித்தீர்களா?

Aarogya Setu app now shows blue ticks ஆரோக்யா சேது பயன்பாடு புதுப்பிக்க 14 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Aarogya Setu app now shows blue ticks shield vaccination status covid 19 Tamil News
Aarogya Setu app now shows blue ticks shield vaccination status covid 19 Tamil News

Aarogya Setu app now shows blue ticks shield vaccination status Covid 19 Tamil News : ஆரோக்யா சேது பயன்பாடு ஒரு புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது. இது உங்கள் தடுப்பூசி நிலையை அதன் பிளாட்ஃபார்மில் புதுப்பிக்க உதவுகிறது. உங்கள் தடுப்பூசி நிலையை நீங்கள் புதுப்பித்தவுடன், பயன்பாடு இரட்டை நீல நிற டிக் மற்றும் கேடயத்தைக் காண்பிக்கும். அதாவது நீங்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுள்ளீர்கள் என்பதாக அர்த்தம்.

ஆரோக்யா சேது பயன்பாட்டைத் திறந்து, உடனடியாக “தடுப்பூசி நிலையைப் புதுப்பிக்கவும்” அம்சத்தை நீங்கள் கவனிப்பீர்கள். உங்கள் நிலையைப் புதுப்பிக்க நீங்கள் நேரடியாக அதைக் கிளிக் செய்து நீல நிற டிக் அல்லது கேடயத்தைப் பெறலாம். ஒரு டோஸ் தடுப்பூசி மட்டுமே எடுத்துக் கொண்டவர்களுக்கு முகப்புத் திரையில் “பாதி தடுப்பூசி” ஸ்டேட்டஸுடன் ஒற்றை நீல நிற எல்லையும், ஆரோக்யா சேது லோகோவுடன் ஒரே டிக் கிடைக்கும்.

நீங்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி எடுத்திருந்தால், பயன்பாட்டின் முகப்புத் திரை இரட்டை பார்டரை காண்பிக்கும் மற்றும் ஆரோக்யா சேது லோகோவில் இரண்டு நீல நிற டிக் இருக்கும். சில நாட்களுக்கு முன்பு நீங்கள் இரண்டாவது டோஸை எடுத்திருந்தால், ஆரோக்யா சேது பயன்பாடு புதுப்பிக்க 14 நாட்கள் ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் மற்றும் உங்கள் கணக்கில் நீல ஷீல்டை சேர்க்கவும்.

கோவின் போர்ட்டல் அல்லது ஆரோக்யா சேது பயன்பாட்டிலிருந்து தடுப்பூசி நிலையின் சரிபார்ப்பு செயல்முறையை முடித்த பின்னரே நீல நிற டிக் அல்லது ஷீல்டை நீங்கள் காண்பீர்கள்.

ஆரோக்யா சேது பயன்பாட்டில் தடுப்பூசி நிலையை எவ்வாறு புதுப்பிப்பது?

ஸ்டெப் 1: உங்களிடம் ஏற்கெனவே இல்லையென்றால் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆரோக்யா சேது பயன்பாட்டைப் பதிவிறக்கவும். பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்தி உள்நுழைக.

ஸ்டெப் 2: நீங்கள் உள்நுழைந்ததும், திரையில் “தடுப்பூசி நிலையைப் புதுப்பித்தல்” பட்டனை காண்பீர்கள். அதைத் க்ளிக் செய்யவும். பதிவுசெய்த மொபைல் எண்ணை மீண்டும் உள்ளிடவும். நீங்கள் வேறு எண்ணைப் பயன்படுத்தி COWIN-ல் பதிவு செய்திருந்தால், “இங்கே புதுப்பிக்கவும்” பட்டனை க்ளிக் செய்வதன் மூலம் அதனை உள்ளிடலாம்.

ஸ்டெப் 3: இப்போது நீங்கள் ஒரு OTP-ஐப் பெறுவீர்கள். அதை நீங்கள் பெட்டியில் உள்ளிட வேண்டும். உங்கள் மொபைல் எண் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதைக் கணினி சரிபார்க்கும்.

ஸ்டெப் 4: உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் சரிபார்க்கப்பட்டதும், பயன்பாடு சுயவிவரங்களின் பட்டியலைக் காண்பிக்கும். உங்கள் சுயவிவரத்தை க்ளிக் செய்யவும். உங்கள் தடுப்பூசி நிலை கோவின் பின் தளத்தில் இருந்து உறுதிசெய்யப்படும். மேலும், இது ஆரோக்யா சேது பயன்பாட்டிலும் புதுப்பிக்கப்படும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Aarogya setu app now shows blue ticks shield vaccination status covid 19 tamil news

Next Story
ஜியோவின் ரூ.98 ரீசார்ஜ் திட்டம் மீண்டும் அறிமுகம்!Reliance Jio Rs 98 Recharge plan returns with reduced validity Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com