உங்க பாதுகாப்பு ரொம்ப முக்கியம்… Aarogya Setu இப்போது கூடுதல் தளங்களில்!

Aarogya Setu: தரைவழி தொலைபேசி வைத்துள்ளவர்கள் மற்றும் சாதாரண கைபேசி வைத்துள்ள பயனர்கள் Aarogya Setu ஆப்பை பயன்படுத்தலாம்.

By: May 18, 2020, 8:38:42 PM

Aarogya Setu App Download In Tamil: Aarogya Setu வை சாதாரண கைபேசி, தரைவழி தொலைபேசி மற்றும் ஜியோ கைபேசியில் எவ்வாறு டவுன்லோடு செய்வது? எப்படி பயன்படுத்துவது உள்ளிட்ட விவரங்கள் முக்கியமானவை,

நமக்கு அருகில் கோவிட்-19 உறுதி செய்யப்பட்ட நபர்கள் யாராவது இருந்தால் அதை தெரிவிக்கவும், கோவிட் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் தடமறியவும் கடந்த மாதம் மத்திய அரசு Aarogya Setu ஆப்பை ஆண்ட்ராய்ட் மற்றும் iOS கைபேசிகளுக்காக அறிமுகப்படுத்தியது. இந்த ஆப் Bluetooth connectivity மற்றும் location data வை பயன்படுத்துகிறது. இதன் மூலம் நாம் தெரியாமல் கோவிட்-19 பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தோமா என்பதை நமக்கு தெரியப்படுத்தும். மேலும் இந்த ஆப் பயனர்கள் ஒரு சுய மதிப்பீட்டைச் செய்ய அனுமதிக்கிறது. அதோடு கோவிட்-19 தொடர்பான அப்டேட்களையும் வழங்குகிறது.


இப்போது வரை Aarogya Setu ஆப்பை ஸ்மார்ட் கைபேசி பயனர்கள் மட்டும் தான் பயன்படுத்த முடிந்தது, ஆனால் IVRS (Interactive Voice Response System) மூலம் சாதாரண கைபேசி வைத்துள்ளவர்களுக்கும் தரைவழி தொலைபேசி வைத்துள்ளவர்களுக்கும் இதன் பயன்பாட்டை இப்போது அரசாங்கம் நீட்டித்துள்ளது. கூடுதலாக ஜியோ கைபேசிகளுக்கான Aarogya Setu ஆப்பின் Bluetooth அடிப்படையிலான பதிப்பை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறை (Ministry of Electronics and Information Technology) வெளியிட்டுள்ளது.

Aarogya Setu ஆப்பை தரைவழி மற்றும் சாதாரண கைபேசிகளில் எவ்வாறு பயன்படுத்துவது.

IVRS சேவை நாடுமுழுவதும் கிடைக்கிறது. 1921 என்ற எண்ணுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து தரைவழி தொலைபேசி வைத்துள்ளவர்கள் மற்றும் சாதாரண கைபேசி வைத்துள்ள பயனர்கள் Aarogya Setu ஆப்பை பயன்படுத்தலாம். நீங்கள் இந்த எண்ணுக்கு ஒரு அழைப்பை செய்யும் போது அது தானாக துண்டிக்கப்பட்டுவிடும். அதன்பிறகு உங்கள் ஆரோக்கியம் தொடர்பான உள்ளீடுகளை கோரி மீண்டும் உங்களுக்கு ஒரு அழைப்பு வரும்

கேட்கப்படும் கேள்விகள் சுய மதிப்பீட்டிற்காக Aarogya Setu ஆப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் போன்றே இருக்கும். பயனர் தரும் பதில்களின் அடிப்படையில் அவர்கள் உடல்நலம் மற்றும் அவர்களின் உடல்நலம் முன்னேறுவதற்கான ஆலோசனைகள் ஆகியவற்றைக் குறிக்கும் குறுஞ்செய்தியைப் பெறுவார்கள்.

Aarogya Setu வை ஜியோ கைபேசியில் எவ்வாறு பயன்படுத்துவது.

Aarogya Setu ஆப் நாட்டிலுள்ள 55 மில்லியனுக்கும் அதிகமான ஜியோ போன்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆப்பை JioStore ல் தேடி கண்டுபிடித்து உங்கள் போனில் நிறுவிக் கொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil” 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Aarogya setu apps download for feature phone jio phone tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X