மெட்டாவிற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்தப்படுகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர்.
வாட்ஸ்அப்பில் ஏராளமான வசதிகள் உள்ளன. ஆனால் இதில் சிலவற்றை மட்டுமே நான் பயன்படுத்துகிறோம். பல அம்சங்கள் பற்றி நமக்கு தெரியவில்லை. குறிப்பாக பெரியவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அந்தவகையில், தவறுதலாக வாட்ஸ்அப் சேட் ஆர்ஷிவ் (Archive) செய்யப்பட்டால், அதை எப்படி unarchive செய்து மீண்டும் அந்த சேட் கொண்டு வருவது குறித்து இங்கு பார்க்கலாம்.
WhatsApp archive என்றால் என்ன?
தனிநபர் அல்லது வாட்ஸ்அப் குழுவிலிருந்து மெசேஜ் பெற விரும்பாத பயனர்கள் சேட்-டை ஆர்ஷிவ் செய்து வைக்கலாம். அது உங்கள் சேட் பக்கத்திலிருந்து மறைத்து வைக்கப்படும். இருப்பினும் அந்த சேட் தகவல்கள் அழிக்கப்படாது, சேட் பக்கத்திலிருந்து மட்டும் மறைத்து வைக்கப்படும்.
Archive மற்றம் unarchive செய்வது எப்படி?
நீங்கள் ஒரு குறிப்பிட்ட சேட்-டை மறைக்க விரும்பினால் அல்லது குரூப் சேட்டிலிருந்து நோட்டிவிகேஷன் பாப்-அப் வேண்டாம் என நினைத்தால் ஆர்ஷிவ் ஆப்ஷன் பயனுள்ளதாக இருக்கும். Archive,unarchive ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன்களில் வேறுபடும்.
ஆண்ட்ராய்டு போன்
ஆண்ட்ராய்டு போன் பயனர்கள் சேட் ஆர்ஷிவ் செய்ய முதலில் சேட் பக்கம் சென்று எந்த சேட்-டை ஆர்ஷிவ் செய்ய வேண்டும் என்பதை செலக்ட் செய்ய வேண்டும். அந்த சேட்- டை அழுத்தி பிடிக்க வேண்டும், இப்போது பாக்ஸ் போன்ற ஐகான் ( downward arrow) பட்டனை கொடுக்க வேண்டும். இப்போது அந்த சேட் ஆர்ஷிவ் செய்யப்பட்டு archived section பக்கத்திற்கு சென்று விடும்.
இப்போது சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய விரும்பினால், சேட் பக்கத்தில் மேலே, வலப்புறத்தில் உள்ள archived section மெனுவிற்கு செல்ல வேண்டும். அங்கு எந்த சேட் அன்-ஆர்ஷிவ் செய்ய வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து அழுத்தி பிடிக்க வேண்டும். பாக்ஸ் போன்ற ஐகான் (upward arrow) பட்டனை கொடுத்தால் சேட் அன்-ஆர்ஷிவ் செய்யப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil