4K டால்பி விஷன், 55W ஸ்பீக்கர்களுடன்... பிரமிக்க வைக்கும் காட்சி அனுபவம்! Acerpure Advance G சீரிஸ் டிவிகள்!

Acerpure நிறுவனம் தனது புதிய Advance G சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 65 மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கும் இந்த டிவிகள், கூகிள் டிவி இயங்குதளத்தில் இயங்குகின்றன.

Acerpure நிறுவனம் தனது புதிய Advance G சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 65 மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கும் இந்த டிவிகள், கூகிள் டிவி இயங்குதளத்தில் இயங்குகின்றன.

author-image
WebDesk
New Update
New Project

4K டால்பி விஷன், 55W ஸ்பீக்கர்களுடன்... பிரமிக்க வைக்கும் காட்சி அனுபவம்! Acerpure Advance G சீரிஸ் டிவிகள்!

Acerpure நிறுவனம் தனது புதிய Advance G சீரிஸ் ஸ்மார்ட் டிவிகளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. 65 மற்றும் 75 இன்ச் அளவுகளில் கிடைக்கும் இந்த டிவிகள், கூகிள் டிவி இயங்குதளத்தில் இயங்குகின்றன. இந்த டிவிகளை Acerpure ஆன்லைன் ஸ்டோர், Acer பிரத்யேக ஸ்டோர், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் பிற நுகர்வோர் மின்னணுவியல் சேனல்கள் மூலம் வாங்கலாம்.

Advertisment

இந்த Acerpure Advance G சீரிஸ் டிவிகள், சிறந்த பார்வை அனுபவத்தை வழங்கும் பல அம்சங்களுடன் வருகின்றன 2 மாடல்களுமே 4K QLED பெசல்-லெஸ் திரைகளைக் கொண்டுள்ளன. இவை 120Hz புதுப்பிப்பு வீதத்தையும், Dolby Vision, HDR10 தொழில்நுட்பங்களுக்கான ஆதரவையும் வழங்குகின்றன. இதனால் துல்லியமான வண்ணங்கள் மற்றும் தெளிவான படங்கள் கிடைக்கும். மேலும், 178 டிகிரி பார்வை கோணம் இருப்பதால் எந்த கோணத்திலிருந்தும் தெளிவாகக் காணலாம்.

வேகமான காட்சிகள் நகரும்போது ஏற்படும் லேக் மற்றும் மங்கல்தன்மையை குறைக்க Motion Estimation, Motion Compensation (MEMC) தொழில்நுட்பம் இதில் உள்ளது. கூகிள் டிவி இயங்குதளத்தால் இயங்குவதால், பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் பல்வேறு பயன்பாடுகளை பதிவிறக்கம் செய்யலாம். கூகிள் அசிஸ்டன்ட் வழியாக குரல் கட்டுப்பாடு மற்றும் உள்ளடக்கத்தை அனுப்ப Chromecast வசதியும் உள்ளது. இந்த டிவிகளில் 55W ஒருங்கிணைந்த ஸ்பீக்கர்கள் உள்ளன. இவை Dolby Atmos ஆடியோவை ஆதரிப்பதால், சிறப்பான சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தைப் பெறலாம். 3 HDMI போர்ட்கள், ஒரு USB 3.0 Type-A போர்ட், ஒரு USB 2.0 Type-A போர்ட், ஒரு RJ45 LAN போர்ட் மற்றும் ஒரு AV இன்புட் போர்ட் என பல இணைப்பு வசதிகள் உள்ளன. இது கேமிங் கன்சோல்கள், சவுண்ட்பார்கள் மற்றும் பிற வெளிப்புற சாதனங்களை இணைக்க உதவுகிறது. Wi-Fi, Bluetooth இணைப்பு வசதிகL இந்த டிவிகளில் உள்ளன. அதிக இடவசதி கொண்ட அறைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும், எளிதில் அணுகக்கூடிய போர்ட் லேஅவுட் வசதியுடனும் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாக Acer நிறுவனம் தெரிவித்துள்ளது.

65 இன்ச் மாடல்: 145 x 84 செ.மீ. = ரூ. 54,999

Advertisment
Advertisements

75 இன்ச் மாடல்: 167.5 x 95 செ.மீ. = ரூ. 79,999

Technology

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: