ஆதித்யா விண்கலத்தின் சூட் கருவி மூலம் வெவ்வேறு அலைநீளங்களில் எடுக்கப்பட்ட சூரியனின் படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது
சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்ய இந்தியா ஆதித்யா எல்-1 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியது. கடந்த செப்.2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்ட விண்கலம் சூரியனின் எல்.1 புள்ளியை நோக்கி பயணித்து வருகிறது. ஜனவரி முதல் வாரத்தில் எல்.1 புள்ளியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்கலத்தில் உள்ள 7 ஆய்வுக் கருவிகளில் ஒன்றான சூட் கருவி Solar Ultraviolet Imaging Telescope (SUIT) முதல் முறையாக சூரியனின் full-disk படங்களை புற ஊதா அலைநீளங்களில் (ultraviolet wavelengths) படம்பிடித்துள்ளது.
சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) பேலோட் மூலம் எடுக்கப்பட்ட படம் 200 முதல் 400 nm வரையிலான வெவ்வேறு அலைநீளங்களில் சூரியனின் முதல் முழு வட்டு ( full-disk) படத்தை எடுத்துள்ளது.
சூரியனின் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் பற்றிய சிக்கலான விவரங்களைப் பற்றிய நுண்ணறிவுகளை இந்தப் படங்கள் வழங்குகின்றன என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
ஆதித்யா எல்-1 இல் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றான சோலார் அல்ட்ரா வயலட் இமேஜிங் டெலஸ்கோப், சூரிய ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியர் ஆகியவற்றின் புற ஊதாப் படத்தைப் பிடிக்கவும், வெளிப்படும் ஒளி ஆற்றலின் மாறுபாட்டை ஆய்வு செய்யவும் பயன்படுகிறது. முன்னதாக,
ஹெல்1ஒ.எஸ், ஏபெக்ஸ் ஆகிய கருவிகள் கடந்த அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் ஆய்வுப் பணிகளை தொடங்கி தரவுகளை வழங்கி வருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“