ஆதித்யா எல் 1 விண்கலம் அதன் சூட் கருவி Solar Ultraviolet Imaging Telescope (SUIT) மூலம் முதல் முறையாக அகச் சிவப்பு ஒளியில் சூரியனின் full-disk படங்களை புற ஊதா அலை நீளங்களில் (ultraviolet wavelengths) படம்பிடித்துள்ளது. இந்த படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெள்ளிக் கிழமை வெளியிட்டது. அதே நேரத்தில் இந்தியாவின் அண்டை நாடான சீனா மீத்தேன் ராக்கெட்டை ஏவி சோதனை செய்துள்ளது.
ஆதித்யா எல் 1
சூரிய புற ஊதா இமேஜிங் டெலஸ்கோப் (SUIT) கருவி மூலம் ஆதித்யா எல்.1 விண்கலம் படங்களை எடுத்தது. இது விண்கலத்தில் உள்ள ஏழு பேலோடுகளில் ஒன்றாகும், மேலும் இது சூரியனின் ஒளிக்கோளம் மற்றும் குரோமோஸ்பியரின் UV படங்களைப் எடுக்கவும், வெளிப்படும் ஒளி ஆற்றலின் மாறுபாடுகளை ஆராயவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மீத்தேன் மூலம் இயங்கும் சீன ராக்கெட்
Zhuque-2 Y-3 மிஷன் சீனாவின் இன்னர் மங்கோலியா பகுதியில் உள்ள ஜிக்வான் செயற்கைக் கோள் ஏவுதளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை மாலை 5.09 மணிக்கு புறப்பட்டது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. ராக்கெட் ஏற்கனவே ஜூலை மாதம் செயற்கைக் கோள்கள் இல்லாமல் சோதனை செய்யப்பட்டது. மீத்தேன்-திரவ ஆக்ஸிஜன் ராக்கெட்டை ஏவிய உலகின் முதல் நிறுவனமாக லேண்ட்ஸ்பேஸ் பெயர் பெற்றது. வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட இந்த பணியானது சீன ஸ்டார்ட் அப் ஸ்பேசிட்டியால் உருவாக்கப்பட்ட 50 கிலோ எடையுள்ள இரண்டு சோதனை செயற்கைக்கோள்களை சுமந்து சென்றது.
இந்த இரண்டு வெற்றிகரமான ஏவுகணைகளும் அதன் Zhuque-2 ராக்கெட் வணிக ரீதியிலான ஏவுதலுக்குத் தயாராக இருப்பதை நிரூபிப்பதாக நிறுவனம் வலியுறுத்துகிறது. இது தற்போது 1.5 மெட்ரிக் டன் எடையுள்ள சுமைகளை 500 கிலோமீட்டர் சுற்றுப்பாதையில் சுமந்து செல்லும் திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட எதிர்கால பதிப்புகளுடன் அந்த எண்ணிக்கையை 4 டன்களாக அதிகரிக்க லேண்ட்ஸ்பேஸ் திட்டமிட்டுள்ளது.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மர்ம பொருள்
ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி மூலம் மங்கலாகப் படம்பிடிக்கப்படுவதற்கு முன்பு, நிலத்தை அடிப்படையாகக் கொண்ட தொலைநோக்கிகளில் இது முதலில் ஒளிரும் குமிழியாகக் காணப்பட்டது. ஆனால் அது விரைவில் தொலைநோக்கியின் கண்ணில் இருந்து முற்றிலும் மறைந்தது. இப்போது, ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் மூலம் எடுக்கப்பட்ட படத்தில் அது மீண்டும் ஒரு மங்கலான விண்மீன் மண்டலமாகத் தோன்றியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“