சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற இந்தியாவின் முதல் சூரிய செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் மாதம் ஏவப்பட்டது. சுமார் 15 லட்சம் கி.மீ கடந்து சென்று
‘லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன்’ என்ற பகுதியை அடைந்து விண்கலம் அங்கு நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் பணியில் அடுத்த கட்டமாக, இஸ்ரோ விண்கலத்தில் உள்ள 'ஸ்விஸ்' கருவியை ஆக்டிவேட் செய்து கருவி அதன் பணியைத் தொடங்கியுள்ளது. ASPEX இரண்டு கருவிகளைக் கொண்டுள்ளது, 'சோலார் விண்ட் அயன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (SWIS) மற்றும் சூப்பர் தெர்மல் மற்றும் எனர்ஜிடிக் பார்ட்டிகல் ஸ்பெக்ட்ரோமீட்டர் (STEPS) ஆகியவை உள்ளன.
இதில், ஸ்விஸ் கருவி கடந்த சனிக்கிழமை ஆய்வைத் தொடங்கியுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
STEPS கருவி கடந்த செப்.10-ம் தேதி செயல்படத் தொடங்கிய நிலையில், 'ஸ்விஸ்' கருவி கடந்த நவ.2-ம் தேதி ஆக்டிவேட் செய்யப்பட்டு தற்போது செயல்படத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ கூறியது.
இஸ்ரோ மேலும் கூறுகையில், "ஸ்விஸ் கருவி 360 டிகிரி பார்வை கொண்ட இரண்டு சென்சார் அலகுகளைப் பயன்படுத்தி, ஒன்றுக்கொன்று செங்குத்தாக இயங்குகிறது. இந்த கருவியானது சூரிய காற்றின் அயனிகளை, முதன்மையாக புரோட்டான்கள் மற்றும் ஆல்பா துகள்களை வெற்றிகரமாக அளவிட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“