Advertisment

ரூ. 8000 பட்ஜெட்டில் போன் வாங்க வேண்டுமா? இந்த ஸ்மார்ட்போன்களை செக் செய்து பாருங்க!

ரூ. 8000 பட்ஜெட்டில் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Best Camera mobile phones Under 10000

ரூ.10 ஆயிரம் விலையில் பெஸ்ட் கேமரா ஸ்மார்ட்போன்கள் தொடர்பாக பார்க்கலாம்.

சாம்சங், விவோ, ரியல் மி, ஓபோ எனப் பல முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் உள்ளன. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வரிசையில் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ரூ. 8000 பட்ஜெட்டில் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.

Advertisment

Moto E13

மோட்டோ E13 போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் சேமிப்பு வசதியுடன் ரூ.7,999க்கு பிளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகிறது. Unisoc T606 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் HD டிஸ்பிளே வாட்டர்-ட்ராப் நாட்ச் வசதியுடன் வருகிறது. USB Type-C சார்ஜிங் போர்ட், 10W ஃபாஸ்ட் சார்ஜிங், 5,000 mAh பேட்டரி வசதி உள்ளது.

மோட்டோ E13 IP52 ரேட்டிங் கொண்டுள்ளது. டால்பி அட்மோஸ் ஆடியோவுக்கான ஆதரவுடன் இது இந்தியாவில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் ஆகும்.

publive-image

Samsung Galaxy A03

சாம்சங்கில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் தேடுகிறீர்கள் என்றால் கேலக்சி A03 நல்ல ஆப்ஷனாக இருக்கும். அமேசான் தளத்தில் ரூ.7,950க்கு விற்பனை செய்யப்படுகிறது. 3 ஜிபி ரேம், 32 ஜிபி ஸ்டோரேஜ் Unisoc Tiger T606 SoC அடிப்படையில் இயங்குகிறது. 6.5 இன்ச் டிஸ்பிளே மற்றும் 5,000 mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் சிறப்பம்சம் 48MP முதன்மை கேமரா f/1.8 aperture உள்ளது.

publive-image

Redmi 10A

ரெட்மி 10 ஏ ஸ்மார்ட்போன் குரோமா தளத்தில் ரூ.7,999க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது இந்தியாவில் ரூ.8,000க்கு கீழ் உள்ள சிறந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜி நெட்வொர்க்கிற்கான ஆதரவுடன் 32 ஜிபி உள் சேமிப்பு வசதியுடன் Mediatek Helio G25 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.

publive-image

கைரேகை சென்சார், மஸ்ட்டி கேமரா அமைப்பு போன்ற அம்சங்களையும் கொண்டுள்ளது. இது 5,000 mAh பேட்டரி போன் ஆகும். போன் பாடி பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. சாதனத்தில் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் கூடுதல் சேமிப்பக விரிவாக்கத்திற்காக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் உள்ளது. 6.53-இன்ச் HD டிஸ்பிளே உள்ளது.

realme narzo 50i Prime

Realme narzo 50i Prime என்பது ரூ. 8,000க்கு கீழ் உள்ள மற்றொரு சிறந்த தேர்வாகும். ரூ. 7,999 போன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனம் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வசதி கொண்டுள்ளது. யூனிசாக் டி612 ப்ராஸசர் மூலம் இயக்கப்படுகிறது. 8MP பேக் கேமரா, 5MP செல்ஃபி கேமரா உள்ளது. இரண்டும் HD வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது.

publive-image

Nokia C20 Plus

8,000 ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள Android UI கொண்ட ஆண்ட்ராய்டு போன் உங்களுக்கு வேண்டுமானால், நோக்கியா சி20 பிளஸ் ஒரு தேர்வாகும். Reliance Digital-இல் 7,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு வழங்குகிறது. யூனிசோக் SC9863A ப்ராஸசர் மூலம் ப்ளோட்வேர் அல்லது மூன்றாம் தரப்பு பயன்பாடுகள் இல்லாமல் இயங்குகிறது.

publive-image

சாதனமானது ஆண்ட்ராய்டு 11 OS இன் கோ எடிசனுடன் அனுப்பப்படுகிறது. 8MP முதன்மை கேமரா மற்றும் 2MP இரண்டாம் நிலை சென்சார் கொண்ட டூயல் கேமரா அமைப்புகளுடன் வருகிறது. 4,950 mAh பேட்டரி 2 நாட்களுக்கு சார்ஜிங் வழங்குகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Smartphone
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment