/indian-express-tamil/media/media_files/6hjcz4O9vCIIjTsPD2L9.jpg)
ஜியோ புதிய ரீசார்ஜ் திட்டங்கள் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
ஜியோ மற்றும் நாட்டில் உள்ள பிற தனியார் தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்கள் கட்டண உயர்வை அறிவித்துள்ளனர். ஜூலை 3 முதல் நடைமுறைக்கு வரும் புதிய திட்டங்கள் 25 சதவீதம் வரை விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.
இருப்பினும், மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் போலல்லாமல், ஜியோ பயனர்களை திட்டங்களை தொடர அனுமதிக்கிறது. அதாவது ஜூலை 3 ஆம் தேதிக்கு முன் தற்போதைய திட்டங்களைப் பயன்படுத்தி பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களை ரீசார்ஜ் செய்யலாம், மேலும் தற்போதைய திட்டம் காலாவதியானதும் இவை அனைத்து நன்மைகளுடன் செயல்படுத்தப்படும்.
ஆங்கிலத்தில் வாசிக்க : Affordable Jio plans with unlimited 5G access worth stacking up before July 3
இதன் மூலம் பயனர்கள் ஜூலை 3 ஆம் தேதிக்கு முன் தங்களுக்குப் பிடித்தமான திட்டங்களைத் திரும்பத் திரும்ப ரீசார்ஜ் செய்துகொள்ளலாம், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கான அணுகல் உட்பட அனைத்துப் பலன்களையும் கூடுதல் கட்டணம் செலுத்தாமல் பெறலாம். தவிர, ஜூலை 3 முதல், ஒரு நாளைக்கு குறைந்தது 2 ஜிபி டேட்டா கொண்ட திட்டத்தை வைத்திருக்கும் பயனர்களுக்கு வரம்பற்ற 5ஜி டேட்டா அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 3 ஆம் தேதி காலாவதியாகும் ஐந்து திட்டங்கள் இங்கே உள்ளன.
ஜியோ ரூ 155 திட்டம்
உங்களிடம் 4G ஃபோன் இருந்தால் வரையறுக்கப்பட்ட 2ஜிபி டேட்டா ஒரு மாத வேலிடிட்டி கொண்ட மலிவான திட்டமாகும். ஜூலை 3 முதல் இதன் விலை ரூ.189 ஆகும்.
ஜியோ ரூ 299 திட்டம்
இது ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவுடன் மிகவும் மலிவு திட்டமாகும். இது வரம்பற்ற 5ஜி அணுகலையும் வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்கள் செல்லுபடியாகும். வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஜூலை 3க்குப் பிறகு, அதே திட்டம் ரூ.349 ஆக இருக்கும்.
ஜியோ ரூ 533 திட்டம்
வரம்பற்ற 5ஜி அணுகலுடன் 4ஜி டேட்டாவில் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வரம்புடன் 56 நாட்கள் செல்லுபடியாகும் திட்டம். இந்த திட்டத்தின் விலை ஜூலை 3 முதல் ரூ.629 ஆக உயரும்.
ஜியோ ரூ 749 திட்டம்
வரம்பற்ற 5ஜி அணுகலுடன் ஒரு நாளைக்கு 2 ஜிபி 4ஜி டேட்டாவை வழங்கும் 90 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்களில் இதுவும் ஒன்று. கூடுதலாக 20 ஜிபி 4ஜி டேட்டாவுடன் கிரிக்கெட் ஆஃபரும் வருகிறது.
ஜியோ ரூ 2999 திட்டம்
வரம்பற்ற 5G அணுகலுடன் நாள் ஒன்றுக்கு 2.5 GB 4G டேட்டாவை வழங்கும் 365 நாட்கள் செல்லுபடியாகும் ஆண்டுத் திட்டமாக இது மிகவும் மலிவான திட்டமாகும்.
விலை | புதிய விலை | வேலிடிட்டி | நாளொன்றுக்கு 4ஜி டேட்டா | 5ஜி அன்லிமிடெட் | கூடுதல் சலுகைகள் |
155 | 189 | 28 நாள்கள் | 2 ஜி.பி | இல்லை | - |
299 | 349 | 28 நாள்கள் | 2 ஜி.பி | ஆம் | - |
533 | 629 | 56 நாள்கள் | 2 ஜி.பி | ஆம் | - |
749 | - | 90 நாள்கள் | 2 ஜி.பி | ஆம் | - |
2999 | 3599 | 365 நாள்கள் | 2.5 ஜி.பி | ஆம் | 20 ஜி.பி.கூடுதல் 4ஜி டேட்டா |
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.