இந்திய விண்வெளி ஸ்டார்ட்அப் அக்னிகுல் காஸ்மோஸ், உலகின் முதல் சிங்கிள் பீஸ் 3டி-அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை இன்று (மே 30) வெற்றிகரமாக ஏவியது. இதற்கு முன்பு ராக்கெட் ஏவுதல் 4 முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று 5-வது முறை வெற்றிகரமாக ஏவப்பட்டது.
அக்னிபான் SORTeD (சப்-ஆர்பிட்டல் டெக்னாலஜி டெமான்ஸ்ட்ரேட்டர்) இன்று வியாழன் காலை 7.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்தியாவில் ஒரு தனியார் ஸ்டார்ட்அப் மூலம் ஏவப்படும் இரண்டாவது ராக்கெட் என்றாலும், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள நாட்டின் ஒரே விண்வெளி நிலையத்தில் நிறுவனம் அமைத்திருக்கும் தனியார் ஏவுதளத்தைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
தனியார் விண்வெளித் துறையுடன் ஒருங்கிணைப்பதற்குப் பொறுப்பான இன்-ஸ்பேஸின் தலைவர் டாக்டர் பவன் கோயங்கா கூறுகையில், @AgnikulCosmos மூலம் அக்னிபான் SOrTeD வெற்றிகரமாக ஏவப்பட்டதில் கிழ்ச்சி! இந்தியாவின் விண்வெளித் துறைக்கு ஒரு வரலாற்று தருணம். உலகின் முதல் சிங்கிள் பீஸ் 3டி பிரிண்டட் செமி கிரையோஜெனிக் எஞ்சின் மூலம் இயக்கப்படும் இந்த சாதனை, நமது இளம் கண்டுபிடிப்பாளர்களின் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்துகிறது என்று பாராட்டியுள்ளார்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் (இஸ்ரோ) அக்னிகுலின் வெற்றிக்கு வாழ்த்தியது, இது ஒரு பெரிய மைல்கல், சேர்ப்பு உற்பத்தியின் மூலம் உணரப்பட்ட அரை-கிரையோஜெனிக் திரவ இயந்திரத்தின் முதல் கட்டுப்பாட்டு வாகனம் என்று கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“