மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ சாட்போட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இது வாட்ஸ்அப்-ன் சர்ச் பாரில் (search bar) இடம் பெறும் வகையில் கொண்டு வரப்படுகிறது.
இது தற்போது குறிப்பிட்ட சில பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த புதிய சாட்போட் அம்சம் சாட் ஜி.பி.டி-ன் செயல்பாடு போல் இருக்கும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதாவது இந்த சாட்போட் இடம் எந்த கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். அது பயனருக்கு பதிலை வழங்கும். இது தற்போது குறிப்பிட்ட நாடுகளில் சோதனை செய்யப்பட்டு வருகிறது என்று WaBetaInfo தெரிவித்துள்ளது.
மேலும், இது வாட்ஸ்அப் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. வாட்ஸ்அப் புதிய அப்டேட் வெர்ஷனில் விரைவில் இந்த வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு இந்த அம்சம் மெட்டாவிற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமிலும் அறிமுகம் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“