நவீன அறிவியல் உலகில் தொழில்நுட்பம் நாம் நினைத்து கூட பார்க்காத வகையில் வேகமாக வளர்ந்து வருகிறது. ஏ.ஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனிதர்கள் செய்யக்கூடிய அனைத்து வேலைகளையும் துல்லியமாக செய்கிறது. உலகையே மிரள வைத்து வருகிறது. அதே சமயம் எதிர்க்காலம் குறித்த அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது. எனினும் பல தொழில்நுட்ப வளர்ச்சி நவீன காலத்திற்கும் மனிதர்களுக்கு எண்ணில் அடங்கா நன்மைகளை செய்து வருகிறது.
Advertisment
அந்த வகையில் டி.டபுள்யூ தமிழ் யூடியூப் தளத்தில் ஆச்சிரியமூட்டும் ஒரு தொழில்நுட்பம் குறித்து தகவல் பகிர்ந்துள்ளது. அதாவது வெர்சுவல் ரியாலிட்டி, ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம் ஒருவர் இறந்த பின்னரும் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளை சந்திக்க முடியும் என்பதை கூறியுள்ளது.
மென் பொருள் (Software) மற்றும் வெர்சுவல் ரியாலிட்டி, ஏ.ஐ தொழில்நுட்பம் உதவியுடன் இதை செய்தும் காட்டியுள்ளனர். ஸ்டோரி பைல்ஸ், Hereafter Ai, VR VIVE studio நிறுவனங்களை இதை செய்து காட்டியுள்ளனர். தென் கொரியாவில் இறந்த குழந்தையை இந்த தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி அச்சு அசல் அந்த குழந்தை விளையாடுவது போலும், நடப்பது போலும் இயல்பு வாழ்க்கை வாழ்வது போலும் மீள உருவாக்கி அனைவருக்கு ஆச்சரியத்தை அளித்தனர்.
Advertisment
Advertisements
ஸ்டோரி பைல்ஸ் இணை நிறுவனர் ஸ்மித் கூறுகையில், நம் முன்னோர்களைப் பற்றி தேடும் போது அவர்களின் பிறந்த தினம், திருமணச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ், புகைப்படம் மட்டுமே கிடைக்கும். ஆனால் வரும் காலத்தினர் அவர்களைப் பற்றி வெறும் வரிகளில் தெரிந்து கொள்வதை விட வேறு வழிகளில் தெரிந்து கொள்ள விரும்பினேன் என்றார்.
தென் கொரியாவில் குழந்தையை மீள் உருவாக்கம் செய்ய உயிரிழந்த குழந்தையின் குரல் பதிவைப் பெற்ற VIVE studio தொழில்நுட்ப வல்லுநர்கள் அதை Hereafter Ai, ஸ்டோரி பைல்ஸ் போன்ற மென்பொருள் மூலம் குரலை மீள் உருவாக்கம் செய்தனர். பின்னர் அந்த குழந்தைகயின் முகமும், உடலும் மீள் உருவாக்கப்பட்டது. இப்படி தான் இறந்தவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் உறவுகளை சந்திக்க நேர்ந்தது. அவ்வாறே அந்த குழந்தைக்கும் செய்யப்பட்டது என்று நிறுவனம் கூறியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“