New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/11/j2Ghm4BJ8tvYLU1DOsaP.jpg)
வெப்பம் தாங்காமல் ஏசிக்கள் வெடிப்பது ஏன்? தடுப்பது எப்படி?
அக்னி நட்சத்திரம் முடிந்தும், பல்வேறு பகுதிகளில் வெயில் கொளுத்தி வருகிறது. இதனால், மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெப்பநிலை அதிகரித்து வருவதால், வீடுகள் மற்றும் அலுவலகங்களில் ஏர் கண்டிஷனர்கள் (AC) ஒரு அத்தியாவசிய சாதனமாக மாறிவிட்டன. இருப்பினும், சமீபத்திய ஏசி வெடிப்பு தொடர்பான செய்திகள் பாதுகாப்பு கவலைகளை எழுப்பியுள்ளன. இந்த சம்பவங்கள் பெரும்பாலும் அதிக வெப்பமடைதல், தவறான வயரிங், மோசமான பராமரிப்பு காரணமாக நிகழ்கின்றன. உங்கள் AC பாதுகாப்பாக இருப்பதையும் திறமையாக செயல்படுவதையும் உறுதி செய்வது அவசியம்.
Advertisment
ஏசி ஏன் வெடிக்கிறது?:
ஏசி வெடிப்பு பொதுவாக தொழில்நுட்பக் கோளாறுகள் அல்லது முறையற்ற பயன்பாடு காரணமாக நிகழ்கின்றன. AC தொடர்ந்து இடைவெளி இல்லாமல் இயங்குகிறது என்றால், கம்ப்ரசர் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கக்கூடும். மோசமான வயரிங், தளர்வான இணைப்புகள் அல்லது ஷார்ட் சர்க்யூட்கள் தீக்கு வழிவகுக்கும். சேதமடைந்த குழாய்களில் இருந்து குளிர்பதன வாயு கசிவுகள் தீப்பிடித்து வெடிப்பை ஏற்படுத்தலாம். அழுக்கு ஃபில்டர்கள் ஏசியின் வேலைப்பாட்டைக் குறைக்கலாம்.
ஏசி வெடிப்பதற்கு முன் என்ன நடக்கும்?
- ஏர் கண்டிஷனரிலிருந்து விசித்திரமான சத்தம்.
- ஏசி கம்ப்ரஸரிலிருந்து எரியும் வாசனை.
- ஏசி ஃபேனிலிருந்து அதிர்வு ஒலி.
- ஷார்ட் சர்க்யூட் காரணமாக ACO வெடிக்கலாம்.
- மின் கோளாறு ஏற்பட்டால், ஏர் கண்டிஷனர் வெடிக்கக்கூடும்.
- ஏசியில் அதிக அழுத்தம் ஷார்ட் சர்க்யூட் ஏற்படலாம்.
ஏசி வெடிப்பைத் தடுக்க டிப்ஸ்:
எரிவாயு கசிவுகள், வயரிங் சிக்கல்கள் மற்றும் அடைபட்ட ஃபில்டர்கள் ஆகியவற்றை முறையாக சரிபார்ப்பது அவசியம். ஏசியை வருடத்திற்கு 2 முறையாவது சர்வீஸ் செய்வதும் அவசியம். ஏசியை நீண்ட நேரம் தொடர்ந்து இயக்க வேண்டாம். அதிக வெப்பமடைவதைத் தடுக்க சிறிது நேரம் ஏசியை ஆஃப் செய்வது நல்லது. வெளிப்புற அலகு சுற்றி சரியான காற்றோட்டத்தை உறுதி செய்யுங்கள். தூசி, இலைகள் மற்றும் எரியக் கூடிய பொருட்களிலிருந்து அதைப் பாதுகாக்கவும். ஏதேனும் வித்தியாசமான வாசனையை நீங்கள் கவனித்தால், அதை அணைத்துவிட்டு உடனடியாக ஒரு தொழில்நுட்ப வல்லுநரை அழைக்க வேண்டும்.
எரியும் வாசனை, புகை அல்லது அசாதாரண ஒலிகளை நீங்கள் கவனித்தால் இந்த வழிமுறைகளைப் பின்பற்றலாம். ஏசியை அணைத்துவிட்டு உடனடியாக அதைத் துண்டிக்கவும். புகை வந்தால் யூனிட்டில் தண்ணீரை ஊற்ற வேண்டாம். உடனடியாக தொழில்நுட்ப வல்லுநரை அழைத்து சரிசெய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.