கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 110 டிகிரி பாரன்ஹீட் அளவிற்கு தமிழ்நாட்டில் கடுமையான வெப்பம் பதிவாகி வருகிறது. மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கி உள்ளனர். இந்திய வானிலை மையமும் பொது மக்களுக்கு எச்சரிக்கை மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. வீட்டில் ஃபேன் ஆன் செய்தாலும் கடுமையான வெப்பம் காரணமாக காற்றும் சூடாகத் தான் வருகிறது. அதனால் பெரும்பாலானோர் ஏ.சி (ஏர் கண்டிஷனர்) பயன்படுத்துகின்றனர். இந்தக் கோடையில் ஏ.சி விற்பனையும் படு ஜோராக உள்ளது. இந்நிலையில், ஏ.சி பயன்படுத்தினால் மின் கட்டணம் அதிகரிக்கும் என்ற பயமும் உள்ளது. இந்நிலையில், ஏ.சி பயன்படுத்தினாலும் மின்சாரத்தை சேமிப்பது பற்றியும் பார்ப்போம்.
கோடையில் பயன்படுத்த சிறந்த ஏ.சி டெம்பரேச்சர் என்ன?
யு.எஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஏஜென்சியின் ஒரு பிரிவான ENERGY STAR கருத்துப்படி, கோடை காலங்ளில் 78 டிகிரி ஃபாரன்ஹீட் செட் செய்வது சரியான ஏ.சி டெம்பரேச்சர் ஆகும். அதோடு இது குறைந்த மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துவதால் செலவை குறைக்கவும் உதவும். எனினும் இது நீங்கள் வீட்டில் இருக்கும் போது பயன்படுத்துவதாகும். "இருப்பினும், உகந்த தூக்கம் மற்றும் வசதிக்காக இரவில் உங்கள் தெர்மோஸ்டாட்டை குறைக்க வேண்டும்" என்று Angie இன் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி Angie Hicks கூறுகிறார்.
நேஷனல் ஸ்லீப் ஃபவுண்டேஷன் இரவில் டெம்பரேச்சரை மேலும் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளது. இரவில் தூங்கும் போது 60 முதல் 67 டிகிரி பாரன்ஹீட் வரை டெம்பரேச்சரை செட் செய்ய பரிந்துரைக்கிறது.
மனித உடல்கள் உறங்குவதற்குத் தயாராக வெப்பநிலையைக் குறைக்கின்றன, மேலும் உங்கள் தெர்மோஸ்டாட்டைக் குறைப்பது அந்தச் செயல்முறைக்கு உதவும் என்று கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“