பார்தி ஏர்டெல் 1 நாள் வேலிடிட்டி உடன் வரும் 3 டேட்டா வவுச்சர்களைக் கொண்டுள்ளது. நாட்டின் மிகப்பெரிய டெலிகாம் ஆபரேட்டர்களில் ஒன்றான ஏர்டெல், இந்த டேட்டா வவுச்சர்களை வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பகுதியிலும் வழங்குகிறது. 1 நாள் வேலிடிட்டியுடன் வரும் டெல்கோவின் 3 திட்டங்களின் விலை ரூ. 49, ரூ. 29 மற்றும் ரூ. 19 ஆகும். இவை அனைத்தும் வெவ்வேறு அளவிலான டேட்டாவுடன் வருகின்றன, ஆனால் அவை ஒரு நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
இந்தத் திட்டங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஆக்டிவ் பேஸிக் ரீசார்ஜ் திட்டத்தை கொண்டிருக்க வேண்டும்.
ஏர்டெல் ரூ.49 திட்டம்
ஏர்டெல் வழங்கும் ரூ.49 திட்டமானது 6ஜிபி டேட்டாவுடன் வருகிறது. திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் வெறும் 1 நாள் என்பதால், ஒரு நாள் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும். 3ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட டேட்டா பயன்படுத்த விரும்புபவர்கள் மட்டுமே இந்தத் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
ரூ.29 திட்டம்
இது நிறுவனம் வழங்கும் பழைய திட்டமாகும். ரூ.29 திட்டம் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது, ஆனால் மீண்டும், 1 நாள் வேலிடிட்டி மட்டுமே உள்ளது. அதாவது, 24 மணிநேரம் முடிந்தவுடன் மீதம் டேட்டா இருந்தாலும் பயன்படுத்த முடியாது, காலாவதியாகிவிடும்.
ஏர்டெல் ரூ.19 திட்டம்
ஏர்டெல்லின் ரூ.19 திட்டம் 1ஜிபி டேட்டாவுடன் வருகிறது. மேலும் 1 நாள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
ஏர்டெல் வழங்கும் மூன்று திட்டங்கள் இவை 1 நாள் செல்லுபடியாகும். அவை அனைத்தும் டேட்டா வவுச்சர்கள். இன்ஸ்டண்டாக டேட்டா தேவைப்படும் பயனர்கள் இந்த வவுச்சர்களைப் பயன்படுத்தி பயனபெறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“