Airtel 11 GB Free Prepaid Data Plans Tamil : 11 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்குகிறது ஏர்டெல். இந்தத் தொலைதொடர்பு நிறுவனம், புதிய ஏர்டெல் 4ஜி வாடிக்கையாளர்களுக்கு 5 ஜிபி இலவச டேட்டாவை வழங்கி வருகிறது. இதனை, ‘Airtel Thanks’ செயலியைப் பதிவிறக்கிய பிறகு பெறமுடியும். நீங்கள் புதிய 4 ஜி சிம் வாங்கியிருந்தால் அல்லது 4 ஜி சாதனமாக மேம்படுத்தப்பட்டிருந்தால், இலவச டேட்டாவைப் பெறுவதற்கு உங்கள் புதிய மொபைல் எண்ணுடன் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியைப் பதிவு செய்ய வேண்டும். ப்ரீபெய்ட் ஏர்டெல் பயனர்களுக்கே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.
ஐந்து 1 ஜிபி கூப்பன்கள் வடிவில் 5 ஜிபி இலவச டேட்டாவை ஏர்டெல் வழங்குகிறது. இது, TelecomTalk-ன் விதிமுறைப்படி 72 மணி நேரத்திற்குள் புதிய 4ஜி வாடிக்கையாளரின் கணக்கில் ஏற்றப்படும். இலவச 5 ஜிபி டேட்டாவைப் பெற புதிய மொபைல் எண்ணை இயக்கிய 30 நாட்களுக்குள் நீங்கள் ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கூப்பன்களைப் பெற்றதும், ஏர்டெல் தேங்க்ஸ் செயலியில் உள்ள “என் கூப்பன்கள்” பகுதியைப் பார்வையிடுவதன் மூலம் சலுகையைப் பெறலாம்.
க்ரெடிட்டான நாளிலிருந்து 90 நாட்களில் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு 1 ஜிபி கூப்பனையும் மீட்டெடுக்க முடியும் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. நீங்கள் அதனை மீட்டெடுத்தவுடன், இலவச டேட்டா மூன்று காலண்டர் நாட்களுக்குள் செயலில் இருக்கும். தவிர, நீங்கள் ஏற்கெனவே 4 ஜி ஏர்டெல் பயனராக இருந்தால், குறிப்பிடப்பட்ட செயலியை இன்னும் பதிவிறக்கம் செய்யவில்லை என்றால், 5 ஜிபி இல்லையென்றால், 2 ஜிபி இலவச டேட்டாவைப் பெறலாம்.
ஏர்டெல் தனது தளத்தில் 6 ஜிபி இலவச டேட்டா சலுகையும் தருகிறது. இருப்பினும், இலவச டேட்டாவைப் பெற சந்தாதாரர்கள் அன்லிமிடெட் ரீசார்ஜ் பேக் மூலம் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்று நிறுவனம் கூறுகிறது. ரூ.598 ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டம் அல்லது அதற்கும் மேலானத் திட்டத்தை வாங்கினால் 84 நாட்கள் செல்லுபடியாகும் 6 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும். அனைத்து இலவச டேட்டாவும் ஒரே நேரத்தில் க்ரெடிட் செய்யப்படாது. வாடிக்கையாளர்களுக்கு 1 ஜிபி இலவச டேட்டா ஆறு கூப்பன்களாகக் கிடைக்கும்.
ரூ.399 ரீசார்ஜ் அல்லது அதற்கும் மேலான திட்டத்தில், 56 நாள்களுக்கு செல்லுபடியாகும் நான்கு 1 ஜிபி இலவச கூப்பன்கள் கிடைக்கும். ரூ.219 ப்ரீபெய்ட் ஏர்டெல் திட்டம் அல்லது அதற்கு மேலான திட்டத்தை வாங்கினால் இரண்டு 1 ஜிபி இலவச கூப்பன்களுக்கு க்ரெடிட் வழங்குகிறது. இந்த கூப்பன் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கக்கூடிய ஏர்டெல் தேங்க்ஸ் செயலியின் மூலம் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு புதிய 4 ஜி ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்து ரூ.598 ப்ரீபெய்ட் பேக் வாங்க திட்டமிட்டால், ஏர்டெல்லிலிருந்து மொத்தம் 11 ஜிபி இலவச டேட்டா கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"