scorecardresearch

Airtel 5G Plus launched: உங்கள் போனில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியுமா?.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

ஏர்டெல் 5ஜி 8 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. எந்தெந்த ஸ்மார்ட்போன்களில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியும் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

Airtel 5G Plus launched: உங்கள் போனில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியுமா?.. இங்கே தெரிந்து கொள்ளுங்கள்!

இந்தியாவில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ தங்களது பயனர்களுக்கு 5ஜி சேவையை வழங்க தொடங்கி உள்ளன.

ஜியோ 4 நகரங்களில் 5ஜி சேவை வழங்குகிறது. ஏர்டெல் 8 நகரங்களில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், சிலிகுரி, நாக்பூர் மற்றும் வாரணாசி பகுதிகளில் வழங்குகிறது.

இந்நிலையில் உங்கள் ஸ்மார்ட்போனில் 5ஜி பயன்படுத்த முடியுமா?, ஏர்டெல் 5ஜி சேவை பயன்படுத்த முடியுமா என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள். பல்வேறு முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களின் போனில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது.

அந்த வகையில் 5ஜி ஆதரிக்கும் சாம்சங், ரியல் மீ, ஒன் பிளஸ், ஆப்பிள் போன் மாடல்களின் பட்டியலை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. நேரடியாக 5ஜி பெறும் போன்கள், அப்டேட் உடன் 5ஜி பெறும் போன்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

ஏர்டெல் 5ஜி எனக் குறிப்பிடுவது ஏன் என்றால், ஒவ்வொரு தொலைத் தொடர்பு நிறுவனங்களும் குறிப்பிட்ட பேண்ட் அலைக்கற்றை ஏலம் எடுத்துள்ளனர். அந்த பேண்ட் அலைக்கற்றை உங்கள் போன் ஆதரிக்க வேண்டும்.

ரியல் மீ (Realme)

ரியல் மீ Narzo சீரிஸ் போன்கள் Realme Narzo 50 5G, Narzo 50 Pro, Narzo 30 5G, Narzo 30 Pro 5G ஆகியவற்றில் ஏர்டெல் 5ஜி சேவை பெற முடியும். ஏர்டெல் 5ஜி பெறும் மற்ற ரியல் மீ போன்கள் Realme 8 5G, Realme 8s 5G, Realme GT 5G, Realme GT ME, Realme GT Neo 2, Realme GT 2, Realme GT 2 Pro, Realme GT Neo 3.

Realme X7 5G, Realme X7 Max 5G, Realme X7 Pro 5G, Realme X50 Pro, Realme 9, Realme 9 Pro, Realme 9 Pro Plus, and Realme 9 SE போன்களிலும் ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியும்.

ஜியோமி, ரெட்மி, போக்கோ (Xiaomi, Redmi and Poco)

ஜியோமி Mi 10, Mi 10i, Mi 10T, Mi 10T Pro, Xiaomi 12 Pro, Mi 11 Ultra, Mi 11X Pro, Mi 11X, Mi 11 Lite NE, Xiaomi 11i, Xiaomi 11T Pro, and Xiaomi 11i HyperCharge போன் மாடல்களில் 5ஜி பயன்படுத்த முடியும்.

Redmi மாடல்கள்

The Redmi Note 11T 5G, Redmi Note 10T, Redmi Note 11 Pro Plus, Redmi 11 Prime, and Redmi K50i போன்களில் ஏர்டெல் 5ஜி ஆதரிக்கும் மற்றும் Poco F3 GT, Poco M4 5G, Poco M4 Pro 5G, Poco F4 5G and Poco X4 Pro போன்களிலும் பயன்படுத்த முடியும்.

Oppo

5ஜி ஆதரிக்கும் Oppo போன்கள்

Oppo Reno 5G Pro, Reno 6, Reno 6 Pro, Reno 7, Reno 7 Pro, Reno 8, Reno 8 Pro, Oppo F19 Pro Plus, Oppo A53s, Oppo A74, Oppo F21 Pro, Oppo K10 5G, and Oppo F21s Pro 5G.

Oppo Find X2 மாடல் போன் சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்டவுடன் அதில் 5ஜி பயன்படுத்த முடியும்.

Vivo (விவோ), iQOO

The Vivo X50 Pro, V20 Pro, X60 Pro+, X60, X60 Pro+, X70 Pro, X70 Pro+, X80 and X80 Pro flagship போன்களில் 5ஜி பயன்படுத்த முடியும்.

மற்ற விவோ போன்கள், V20 Pro, V21 5G, V21e, Y72 5G, V23 5G, V23 Pro 5G, V23e 5G, T1 5G, T1 Pro 5G, Y75 5G, V25, V25 Pro, Y55, and Y55s போன்களிலும் நேரடியாக ஏர்டெல் 5ஜி பயன்படுத்தலாம்.

iQOO நிறுவனபோன்கள்

iQOO 9T, iQOO Z6, iQOO 9 SE, iQOO 9 Pro, iQOO 9, iQOO Z5 5G and iQOO Z3, along with the iQOO 7 and iQOO 7 Legend போன்களில் 5ஜி பயன்படுத்த முடியும்.

ஒன்பிளஸ் ( OnePlus)

OnePlus Nord, Nord CE, Nord CE 2, Nord CE 2 Lite, Nord 2T 5G, OnePlus 9, OnePlus 9 Pro, OnePlus 10 Pro 5G, OnePlus 10R, OnePlus 10T போன்களில் நேரடியாக ஏர்டெல் 5ஜி இணைய சேவை பெறலாம்.

OnePlus 8, OnePlus 8 Pro, OnePlus 8T, OnePlus 9R, OnePlus 9RT and OnePlus Nord 2 5G போன்களிலும் 5ஜி பயன்படுத்த முடியும். ஆனால் முதலில் சாஃப்ட்வேர் அப்டேட் செய்ய வேண்டும். சாஃப்ட்வேர் அப்டேட் செய்யப்பட்ட உடன் இந்த போன்களில் 5ஜி பயன்படுத்தலாம்.

ஆப்பிள்

ஆப்பிள் ஐபோன் 12 சீரிஸ் (iPhone 12, iPhone 12 mini, iPhone 12 Pro, iPhone 12 Pro Max), Apple iPhone 13 series (iPhone 13, iPhone 13 mini, iPhone 13 Pro, iPhone 13 Pro Max), Apple iPhone 14 series (iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro, iPhone 14 Pro Max) போன்களில் ஏர்டெல் 5ஜி பயன்படுத்தலாம்.

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து ஐபோன்களிலும் 5ஜி பயன்படுத்தலாம், ஆனால் அதற்கு முதலில் சாஃப்ட்வேர் அப்டேட் தேவை என ஏர்டெல் அதன் தளத்தில் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ஆப்பிள் நிறுவன தரப்பில் எதுவும் உறுதிப்படுத்தவில்லை. விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் ( Samsung) போன்களில் 5ஜி

Galaxy A53 5G, Galaxy A33 5G, Galaxy Fold 4, Galaxy Flip 4 போன் மாடல்களில் நேரடியாக ஏர்டெல் 5ஜி பயன்படுத்த முடியும். சாம்சங் கேலக்சி (Samsung Galaxy) Samsung Galaxy, Samsung Galaxy S21 போன்களில் 5ஜி பயன்படுத்தலாம்.

Samsung Galaxy Note 20 Ultra, S21 Plus, S21 Ultra, S21, Galaxy Z Fold 2, Galaxy Z Fold 3, Galaxy Flip 3 ஆகிய போன்களில் அப்டேட் உடன் 5ஜி பயன்படுத்த முடியும்.
M-சீரிஸ் மற்றும் A- சீரிஸ் போன்கள் Galaxy F23, A52s, M52, A22, M32, A73, A73, M42, M53, M13 போன்ற போன்கள் அப்டேட் உடன் ஏர்டெல் 5ஜி இணைய சேவையைப் பயன்படுத்தலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel 5g plus launched in india is your smartphone eligible for the network