Things to know before buying 5g smartphones: இந்தியாவில் 5ஜி இணையசேவையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார். தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு சேவை வழங்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. முதற்கட்டமாக மெட்ரோ நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட உள்ளது. படிப்படியாக சேவை விரிவுபடுத்தப்படும் என அனைத்து தொலைத் தொடர்பு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
இந்நிலையில் மக்களிடையே 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவதும் அதிகரிக்கும். அப்படி 5ஜி செயல்பாடுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை நீங்கள் வாங்கும்போது தெரிந்து கொள்ள வேண்டிய சிலவற்றை குறித்து இங்கு பார்ப்போம்.
- 5ஜி சிப்செட்
5ஜி நெட்வொர்க்குகளை ஆதரிக்க, உங்கள் மொபைலில் 5ஜி சிப்செட் இருக்க வேண்டும். தற்போது வரும்
பெரும்பாலான புதிய சிப்செட்கள் இடைப்பட்ட மற்றும் முதன்மையான பிரிவுகளில் 5ஜி பயன்பாடு கொண்டுள்ளது. குவால்காம் (Qualcomm)வகை போன்கள் ஸ்னாப்டிராகன் 695 ( Snapdragon 695) மற்றும் அதற்கு மேற்பட்டவை, Snapdragon 765G மற்றும் அதற்கு மேற்பட்டவை மற்றும் Snapdragon 865 மற்றும் அதற்கு மேற்பட்டவை போன்ற புதிய சிப்செட்கள் இயல்பாகவே 5ஜி செயல்பாடு கொண்டுள்ளது.
மீடியா டெக் ( MediaTek) மூலம் இயங்கும் போன்கள், மீடியாடெக் டைமென்சிட்டி-சீரிஸ் சிப்செட் 5ஜி செயல்பாடு கொண்டுள்ளது. Dimensity 700, Dimensity 8100, Dimensity 9000 போன்றவற்றிலும்
5ஜி இயங்கும். பழைய G-series மற்றும் Helio-series போன்களில் 5ஜி பயன்படுத்த முடியாது.
- 5ஜி பேண்ட் (5G bands)
5ஜி நெட்வொர்க்குகளை போன் ஆதரிக்குமா இல்லையா என்பதை தீர்மானிக்க சிப்செட் உதவுகிறது. அந்தவகையில் 5ஜி இணைப்பு எவ்வளவு நம்பகமானதாக இருக்கும், எவ்வளவு வேகமாக இருக்கும் என்பதற்கு பேண்ட் ஆதரவு முக்கியம்.
நீங்கள் 5ஜி போன் வாங்கும் முன், போன் எந்த போண்ட் ஆதரவை பெறுகிறது என பார்க்க வேண்டும். சம்பந்தப்பட்ட போன் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் உங்கள் போன் எந்த பேண்ட் ஆதரவு கொண்டுள்ளது என்பது தெரியும். நிலையான 5ஜி இணைப்புக்கு, 8-12, 5ஜி பேண்ட் ஆதரவு பெறும் போன்களை தேர்வு செய்யுங்கள்.
3. போன் அப்டேட்
உங்கள் ஸ்மார்ட்போன் கூட 5ஜி இணைப்பு இருக்கலாம். அதுகுறித்து உங்கள் போன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். போன் நிறுவனத்தின் இணைய பக்கத்தில் உங்கள் போன் மாடல் குறித்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். அதே சமயம் உங்கள் போன் நிறுவனம் கொடுக்கும் சாப்ட்வேர் அபடேட்களை முறையாக பயன்படுத்துங்கள். இது உங்களின் ஸ்மார்ட்போன் 5ஜி பயன்படுத்த உதவும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“