ஏர்டெல் மற்றும் அமோசான் இந்தியா இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3399 க்கு 4ஜி ஸ்மார்ஃபோன் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர்டெல் மற்றும் அமோசான் இந்தியா இணைந்து வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3399 க்கு 4ஜி ஸ்மார்ஃபோன் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆன்லைன் ஷாப்பிங்கில் தனக்கென தனி இடத்தைப் பிடித்திருக்கும் அமேசான் நிறுவனம், 4ஜி ஸ்மார்ஃபோன்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. இந்த கேஷ்பேக் அறிவிப்பு அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ள 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதனுடன், ஏர்டெல் நிறுவனமும் இணைந்து ரூ.600 க்கு கேஷ்பேக் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ஒரு தரமிக்க ஸ்மார்ஃபோனை வாடிக்கையாளரால் ரூ. ரூ.3399 விலையில் வாங்க முடியும்.
1. அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும்
2.ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.
3.இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.
4. அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும்