ஓ.டி.டி தளங்கள் பிரபலமடைந்து வரும் நிலையில், ஏர்டெல், ஜியோ உள்ளிட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் நெட்ஃபிலிக்ஸ் சந்தாவுடன் மொபைல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகின்றன. முன்னதாக, வோடபோன் நிறுவனமும் நெட்ஃபிலிக்ஸ் சந்தா உடன் ரீசார்ஜ் திட்டத்தை வழங்கி வந்தது. ஆனால் சில நாட்களுக்கு முன் நிறுவனம் அந்த திட்டத்தை காரணமின்றி நிறுத்தியது.
இந்நிலையில், ஏர்டெல் மற்றும் ஜியோ வழங்கும் இலவச நெட்ஃபிலிக்ஸ் சந்தா உடன் வரும் ரீசார்ஜ் திட்டம் குறித்து இங்கு பார்ப்போம்.
ரிலையன்ஸ் ஜியோ
தற்போது, ரிலையன்ஸ் ஜியோ நெட்ஃபிலிக்ஸ் அடிப்படை சந்தாவுடன் வரும் வகையில் 2 ப்ரீபெய்ட் திட்டங்களை கொண்டுள்ளது. ரூ.1,099 விலையில் வரும் திட்டம் ஒரு நாளைக்கு 2 ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய நன்மைகளை கொண்டுள்ளது. நெட்ஃபிலிக்ஸ் அடிப்படை சந்தாவுடன் வரும் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி உள்ளது.
மேலும், இதே நன்மைகளுடன் அதிக மொபைல் டேட்டாவை விரும்பினால் ரூ. 1,499 திட்டத்தை பயன்படுத்தலாம். அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகிய நன்மைகளுடன் இந்த திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி மொபைல் டேட்டாவை வழங்குகிறது.
ஜியோவின் பெரும்பாலான ப்ரீபெய்ட் திட்டங்களைப் போலவே, இதிலும் ஜியோ டி.வி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றிற்கான அணுகலைப் பெறலாம்.
ஏர்டெல்
ஜியோவைப் போலல்லாமல் ஏர்டெல் நெட்ஃபிலிக்ஸ் சந்தவுடன் ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது. ரூ.1,499க்கு வரும் இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஒரு நாளைக்கு 3ஜிபி மொபைல் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் ஆகியவைகளை வழங்குகிறது.
அதோடு 3 மாதங்கள் Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் Wynk Musicக்கான அணுகல் கூடுதல் நன்மைகளையும் ஏர்டெல் இந்திட்டத்தில் வழங்குகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“