ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 25% கட்டணம் அதிகரிப்பு… புதிய ரேட் என்ன?

ஏர்டெல் அடிப்படை திட்டம் 25 விழுக்காடு கட்டண உயர்வும், மற்ற திட்டங்கள் 20 விழுக்காடு கட்டண உயர்வும் பெற்றுள்ளது. திட்டத்தின் புதிய கட்டணத்தை இச்செய்தி தொகுப்பில் காணலாம்

நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ஏர்டெல், ப்ரீபெய்ட் திட்டங்களுக்கு 20-25 சதவீத கட்டணம் உயர்த்தப்படுவதாக இன்று அறிவித்துள்ளது. வாய்ஸ் பிளேன், அன்லிமிடட் வாய்ஸ், டேட்டா பிளேன், டேட்டா டாப் அப் ரீசார்ஜ் என அனைத்து திட்டங்களிலும் கட்டணத்தை அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணம் வரும் நவம்பர் 26 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

ஏர்டெல் அடிப்படை திட்டம் 25 விழுக்காடு கட்டண உயர்வும், மற்ற திட்டங்கள் 20 விழுக்காடு கட்டண உயர்வும் பெற்றுள்ளது.

இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் தரப்பில் கூறுகையில், ” ஏஆர்பியு நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரமுக்கு தேவைப்படும் கணிசமான முதலீடுகளை செயல்படுத்தும் நோக்கத்துடன் கட்டண உயர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் முக்கியமாக, ஏர்டெல் அடுத்ததாக இந்தியாவில் 5ஜி சேவையை வெளியிடவுள்ளது.அந்நடவடிக்கை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக ப்ரீபெயிட் திட்டங்களின் கட்டணத்தை நவம்பர் மாதத்தில் உயர்த்தியுள்ளோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்லின் அடிப்படை திட்டமான 79 ரூபாய் வாய்ஸ் பிளேன் தற்போது 99 ரூபாய்க்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் 50 சதவீதம் கூடுதலாக டாக் டைம் கிடைக்கிறது.

28 நாட்கள் கொண்ட 298 ரூபாய் திட்டம் 359 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதில் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

மிகவும் பிரபலமான 598 ரூபாய் திட்டத்தினை, 719 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.

698 ரூபாய் திட்டத்தினை, 839 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதுவும் 84 நாட்கள் வேலிடிட்டியாகும். இதிலும் அன்லிமிடெட் கால் சேவை, தினசரி 100 இலவச எஸ் எம் எஸ், தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும்.

இதுபோலவே ஆண்டு முழுவதுக்குமான திட்டங்கள், டேட்டா திட்டங்களுக்கும் கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. கட்டண உயர்வை விரிவாக கீழே உள்ள அட்டவணையில் காணலாம்:

5ஜி சேவை வரவுள்ள நிலையில், நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கும் நோக்கில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏர்டெல் கட்டண உயர்வு காரணமாக, ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா போன்ற பிற நிறுவனங்களும் விரைவில் கட்டணத்தை உயர்த்துவதை நாம் காணலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel announces 20 25 percent hike on prepaid plans

Next Story
அடுத்த அதிரடிக்கு தயாராகும் ஜியோ… ரூ.500 விலையில் 4ஜி வோல்ட்இ போன்?Jio, Reliance jio, Feature phone,
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express