ஏர்டெல் வழங்கும் அட்டகாசமான ரூ.6,000 கேஷ்பேக் சலுகை!

Airtel announces Rs6000 Cashback offer Tamil News ரூ.12,000 வரை விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது இது செல்லுபடியாகும்.

Airtel announces Rs6000 Cashback offer Tamil News
Airtel announces Rs6000 Cashback offer Tamil News

Airtel announces Rs6000 Cashback offer Tamil News : ஏர்டெல் அதன் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு புதிய கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட சாதனங்களை வாங்கும்போது ரூ.6,000 கேஷ்பேக் வழங்குகிறது. இந்த கேஷ்பேக் சலுகை, குறைந்த பட்ஜெட் தொலைபேசிகளிலும் கிடைக்கிறது. இந்த சலுகையைப் பற்றி மேலும் அறியப் படிக்கவும்.

ஏர்டெல் ரூ.6,000 கேஷ்பேக் சலுகை விவரங்கள்

சமீபத்திய ரூ.6,000 ஏர்டெல் கேஷ்பேக் சலுகை சாம்சங், ஒப்போ, ரியல்மி, நோக்கியா, டெக்னோ, லெனோவோ, மோட்டோரோலா, இன்பினிக்ஸ், விவோ, ஐடெல், ஷியோமி மற்றும் லாவா போன்ற பிராண்டுகளின் நிறைய போன்களுக்கு பொருந்தும். ரூ.12,000 வரை விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வாங்கும்போது இது செல்லுபடியாகும்.

கேஷ்பேக் தவிர, ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் இலவச திரை மாற்றீடுகளையும் இதில் பெறலாம். ஏர்டெல் தேங்க்ஸ் நன்மைகளின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்கள் இலவசமாக விங்க் மியூசிக் மற்றும் 30 நாட்கள் இலவச அமேசான் பிரைம் மொபைல் பதிப்பைப் பெறுவார்கள். சாதனத்தை வாங்குவதற்கு முன், அவர்கள் வாங்கத் திட்டமிட்டுள்ள கருவிக்கு கேஷ்பேக் கிடைக்குமா இல்லையா என்பதை ஏர்டெல்லின் தளத்தில் நீங்கள் பார்க்கலாம்.

வாடிக்கையாளர் தங்கள் தொலைபேசி எண்ணை ரூ.249 பேக் அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே கேஷ்பேக் வழங்கப்படும் என்று ஏர்டெல் குறிப்பிடுகிறது. நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், இந்த ப்ரீபெய்ட் திட்டம் 1.5 ஜிபி தினசரி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், இலவச அமேசான் பிரைம் மொபைல் பதிப்பு மற்றும் பலவற்றை வழங்குகிறது.

ரூ.6,000 கேஷ்பேக் சலுகையைப் பெற, ஒருவர் இந்த பேக்கை 36 மாதங்களுக்குத் தொடர்ந்து வாங்க வேண்டும் என்று நிறுவனம் கூறுகிறது. வாடிக்கையாளர்களுக்கு இரண்டு தவணைகளில் கேஷ்பேக் வழங்கப்படும். முதலாவது 18 மாதங்களுக்குப் பிறகு 2,000 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும், இரண்டாவது 36 மாதங்கள் முடிந்த பிறகு வரும். பிறகு, மீதமுள்ள ரூ.4,000-ஐ ஏர்டெல் உங்களுக்கு வழங்கும்.

இந்த கேஷ்பேக் பணம் உங்கள் ஏர்டெல் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கில் மாற்றப்படும். “ஏர்டெல் நெட்வொர்க்கில் புதிய கைபேசி பயன்படுத்தப்பட்ட 30 நாட்களுக்குள் பயனர் புதிய 4 ஜி கைபேசியை ரீசார்ஜ் செய்தால் மட்டுமே எந்தவொரு பயனரும் சலுகையைப் பெற முடியும்” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்கள் முதல் கேஷ்பேக்கை பெற மறந்து விட்டால், அவர்கள் இரண்டாவது கேஷ்பேக்கிற்கு தகுதி பெற மாட்டார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சலுகை போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்காது மற்றும் ப்ரீபெய்ட் பயனர்கள் மட்டுமே இதைப் பெற முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel announces rs6000 cashback offer tamil news

Next Story
உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கை மேலும் தனிப்பட்டதாக மாற்ற 5 அம்சங்கள்Instagram 5 privacy features you can enable right now Tamil News
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com