/tamil-ie/media/media_files/uploads/2017/10/5airtel-1.jpg)
Airtel
Airtel Xstreme Fibre Broadband: ஜியோவின் சமீபத்திய அதிரடி மாற்றத்தால் ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர புதிய புதிய ஆஃபர்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் தனது ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு புதிய ஆஃபர்களை வழங்கி தெறிக்கவிட்டுள்ளது.
ஏர்டெல் நிறுவனம் சமீபத்தில் அதன் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை அறிமுகப்படுத்தியது என்பதை நாம் அறிவோம். இது சாட்டிலைட் டிவி மற்றும் OTT இயங்குதளங்களை இணைக்கும் ஹைப்ரிட் செட்-டாப்-பாக்ஸ் ஆகும்.
இதன் அறிமுக விலையானது ரூ. 3,999 ஆகும். இப்போது இதில் உங்களால் 10 சதவீதம் வரை ஆஃபர் பெற முடியும். ‘ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர்’ திட்டமும் இப்போது வினாடிக்கு குறைந்தபட்சம் 100 மெகாபைட்டடுடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடிப்படை திட்டத்தைத் தவிர, ஏர்டெல் மூன்று மாதங்களுக்கு நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் 12 மாதங்கள் மற்றும் வரம்பற்ற ஜீ 5 மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் உள்ளடக்கம் ஆகியவற்றை இந்த திட்டத்தில் இணைத்து வெளியிட்டுள்ளது.
கூடுதல் ரூ .299 செலுத்தி அனைத்து திட்டங்களையும் வரம்பற்ற திட்டமாக நீங்கள் மாற்றிக் கொள்ளலாம். 2.41 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனத்திற்குப் பிறகு நாட்டின் இரண்டாவது பெரிய பிராட்பேண்ட் சேவையை ஏர்டெல் வழங்கி வருகிறது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் ரூ. 799 திட்டத்தில் இனி 150 ஜிபி பெற முடியும். அதிகபட்ச வேகம் 40 எம்.பி.பி.எஸ்ஸிலிருந்து 100 எம்.பி.பி.எஸ் ஆகவும் அதிகரித்து வழங்கப்படுகிறது.
ஏர்டெல் ரூ .1,099 திட்டம் இனி ரூ. 999, ரூ .1,599 மாத பிராட்பேண்ட் திட்டம் இனி ரூ .1,499 என மாற்றப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.