1 மாதம் வேலிடிட்டி: ரூ.200-க்கும் கீழ் ஏர்டெல்லின் 3 டேட்டா திட்டங்கள்

ஏர்டெல் வழங்கும் ரூ.199 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ் மற்றும் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். முழுமையாக 1 மாதத்திற்கான திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் ரூ.199 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

ஏர்டெல் வழங்கும் ரூ.199 திட்டமானது அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்.எம்.எஸ் மற்றும் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி கொண்டதாகும். முழுமையாக 1 மாதத்திற்கான திட்டத்தை தேடுகிறீர்கள் என்றால் ரூ.199 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

author-image
WebDesk
New Update
Airtel

ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ப்ரீபெயட், போஸ்ட்பெய்ட் என திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் 1 மாத வேலிடிட்டி உடன் ரூ.200-க்கும் கீழ்  டேட்டா பேக் உடன் வரும் ஏர்டெல்லின் திட்டங்கள் பற்றிப் பார்ப்போம். 

Advertisment

ரூ.200-க்கும் கீழ் ஏர்டெல் 3 திட்டங்களை கொண்டுள்ளது. ரூ.155, ரூ.179, ரூ.199 என திட்டங்களை வழங்குகிறது. இவை முறையே 1ஜிபி, 2ஜிபி மற்றும் 3ஜிபி டேட்டா வழங்குகிறது. 

ஏர்டெல் 1ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் 

ஏர்டெல் வழங்கும் ரூ.155 திட்டம் டெல்லிகோவின் பேஸிக் திட்டமாகும். மேலும் 1ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் 300 எஸ்எம்எஸ் உடன் வருகிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 24 நாட்கள். ஏர்டெல்லின் சிம்மை செயலில் வைத்திருக்க, நுகர்வோர் செய்ய வேண்டிய குறைந்தபட்ச ரீசார்ஜ் இதுவாகும்.

Advertisment
Advertisements

2ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம்

பார்தி ஏர்டெல்லின் 2ஜிபி டேட்டா ப்ரீபெய்ட் திட்டம் ரூ.179-க்கு வருகிறது மேலும் இது வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 300 எஸ்எம்எஸ் போன்ற கூடுதல் நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 28 நாட்கள் ஆகும். 

 3ஜிபி டேட்டா திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.199 திட்டமானது முழுமையான 30 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும். அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ் மற்றும் 3ஜிபி டேட்டாவுடன் வருகிறது. 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்களானால், ஏர்டெல் வழங்கும் ரூ.199 திட்டம் ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: