Advertisment

ஏர்டெல் டி.டி.எச் : உங்களுக்கு விருப்பமான சேனல்களுக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு...

ஹாத்வேவும், டென் நெட்வொர்க்ஸ், சிட்டி கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் புதிய கட்டணங்களை அறிவித்துள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trai's New Broadcasting Framework, Airtel Digital TV Channels New Price

Trai's New Broadcasting Framework

Airtel Digital TV Channels New Price : கேபிள் டிவி மற்றும் டிடிஎச் சேவைகளில் நமக்கு தேவைப்படும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தி பார்த்துக் கொண்டால், அதற்கான கட்டணம் குறைவாக இருக்கும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (ட்ராய்) கேபிள் டிவி ஒழுங்குமுறை சட்டத்தை கொண்டு வந்தது.

Advertisment

இனிமேல் வாடிக்கையாளர்கள், தாங்கள் விரும்பி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் கட்டணங்கள் செலுத்தினால் போதும் என்ற நிலை வந்ததிற்கு பின்பு டி.டி.எச். சேவைகள், ஒவ்வொரு சேனலுக்குமான கட்டண விபரங்களை வெளியிட்டுள்ளது.

டிஷ் டிவி, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, ஹாத்வே, டென் நெட்வொர்க்ஸ், மற்றும் சிட்டி கேபிள் போன்ற டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் புதிய கட்டணங்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க : பார்க்கும் டிவி சேனல்களுக்கு மட்டும் பணம் கட்டினால் போதும்… ட்ராயின் புதிய திட்டம் பிப்ரவரி 1ல் அமல்

Airtel Digital TV Channels New Price : ஏர்டெல் நிறுவனத்தின் கட்டணம்

இந்தி, ஆங்கில பொழுதுபோக்கு சேனல்கள், மியூசிக் சேனல்கள், ஸ்போர்ட்ஸ் சேனல்கள், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு சேனல்கள், மலையாளம், மராத்தி, தெலுங்கு மற்றும் இதர மொழி சார்ந்த சேனல்களை வழங்கி வருகிறது. தங்களுக்கு பிடித்தமான பேக்குகளை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் .

ஏர்டெல் நிறுவனம் வழங்கியிருக்கும் பேக்கானது ஒரு மாதத்திற்கானது. அடிப்படை பேக்கிற்கான கட்டணம் 150 மட்டுமே. ஹிந்தி எச்.டி. சேனல்களான ஸ்டார் பிள, ஸ்டார் பாரத், ஜீ டிவி ஆகியவற்றை பார்க்க விரும்பினால் அதற்கு மாதத்திற்கு தனியாக 22 ரூபாய் கட்ட வேண்டும். லே ப்ளக்ஸ் சேனலுக்கு ரூபாய் 5.90 மட்டுமே கட்டணம். ஜீ ஸ்டுடியோவிற்கு 22.42 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

ஏர்டெலின் மேஜிக் எச்.டி. ROI பேக்கின் விலை 93 ரூபாய் ஆகும். அதில் ஸ்டார் ப்ளஸ், ஸ்டார் கோல்ட், ஜீ சினிமா, சோனி, நேசனல் ஜியாகிரபி, ஸ்டார் ஸ்போர்ட்ஸ், மற்றும் குறிப்பிட்ட பெங்காலி மராத்தி சேனல்களை பார்த்துக் கொள்ளலாம்.

Trai's New Broadcasting Framework

 

டிஷ்டிவியின் கட்டணங்கள்

தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பிராந்திய மொழி சேனல்களையும், குழந்தைகளுக்கான சேனல்கள், லைஃப் ஸ்டைல் மற்றும் பேஷன் சேனல்களுக்கான கட்டணங்களை வெளியிட்டிருக்கிறது.

ஸ்டார் ப்ளஸ் மற்றும் கலர்ஸ் தொலைக்காட்சிகளுக்கான கட்டணம் 19 ரூபாய். சோனி, சாப் எச்.டி, ஸ்டார் மூவிஸ் எச்.டி சேனல்களுக்கும் 19 ரூபாய் கட்டணம். மேக்ஸ் எச்.டி - 17 ரூபாய். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இந்தி 19 ரூபாய் ஆகும்.

Trai's New Broadcasting Framework

கேபிள் ஆப்பரேட்டர்களான ஹாத்வேவும், டென் நெட்வொர்க்ஸ், சிட்டி கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் புதிய கட்டணங்களை அறிவித்துள்ளனர்.

Trai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment