Advertisment

ஏர்டெல் டிஜிட்டலில் உங்களுக்கு விருப்பமான சேனல்களை தேர்வு செய்வது எப்படி?

முதல் 100 சேனல்களை தாண்டும் போது, ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel Prepaid, Postpaid Plan Hike From December 2019, Airtel Prepaid Data Plans, airtel plans, airtel tariff

Airtel Prepaid Data Plans

Airtel Digital TV subscription All DTH packs : ட்ராயின் புதிய டிஜிட்டல் டிவி மற்றும் கேபிள் டிவி கொள்கைகளின் படி ஒவ்வொரு டி.டி.எச் நிறுவனமும் தங்களின் வாடிக்கையாளர்களை தக்க வைக்க நிறைய சலுகைகளையும், ஒருங்கிணைந்த பேக்குகளையும் அளித்து வருகிறது. அந்த வகையில் ஏர்டெல் வழங்கும் சலுகைகள் ஒரு பார்வை.

Advertisment

ப்ரோட்காஸ்டர் பொக்கே ஆஃபர் (Broadcaster Bouquet from Airtel Digital TV)

டிஸ்கவரி, டைம்ஸ் நவ், ஸ்டார், மற்றும் சோனி போன்று பல்வேறு சேனல்களை வழங்கும் ப்ரோட்காஸ்டர்களிடம் இருந்து பெறப்படும் சேவைகளை வழங்கும் ஆஃபர் பெயர் தான் ப்ரோட்காஸ்டர் பொக்கே ஆஃபர். 0.59 ரூபாயில் இருந்து சுமார் 171.1 ரூபாய் வரையில் இந்த சலுகைகளை பெற இயலும். இதனை தேர்வு செய்துவிட்டால், அந்த குறிப்பிட்ட ப்ராட்காஸ்டர் வழங்கும் அனைத்து சேனல்களையும் பெறலாம்.

Airtel A-La-Carte channels from Airtel Digital TV

இந்த சலுகையின் மூலமாக சந்ததாரர் தங்களுக்கு விருப்பமான கட்டணச் சேனல்களையும் பெற்றுக் கொள்ளலாம். அதே போன்று இலவச சேனல்களையும் பெற்றுக் கொள்ளலாம். மேலும் 563 சேனல்கள் இந்த பட்டியலின் கீழ் வருகின்றது.

இதில் எச்.டி மற்றும் எஸ்.டி சேனல்கள் என முறையே அடக்கம். பொழுதுபோக்கு, விளையாட்டு, செய்திகள், மற்றும் திரைப்படங்கள் என அனைத்து கேட்டகிரியிலும் நீங்கள் சேனல்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த பேக்கின் விலை சரியாக 0.1 ரூபாயில் துவங்கி ரூ.59 வரையில் உள்ளது.

ஃப்ரீ டூ ஏர் பேக்

இலவச சேனல்களை தேர்ந்தெடுத்து அதை பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் சலுகை இதுவாகும். இதன் மூலம் ஏர்டெல் டிஜிட்டலில் இருக்கும் 100 இலவச சேனல்களை கட்டணம் ஏதுமின்றி பார்த்துக் கொள்ளலாம். ஆனால், நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸ் மட்டும் செலுத்த வேண்டியது இருக்கும்.

கட்டணம் செலுத்தும் முறை :

நெட்வொர்க் கெப்பாசிட்டி ஃபீஸாக 153.4 ரூபாயை வாடிக்கையாளர்கள் கட்டணமாய் செலுத்த வேண்டும். முதல் 100 சேனல்களை தாண்டும் போது, ஒவ்வொரு 25 சேனல்களுக்கும் 23.60 ரூபாயை கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த கட்டணம் ஜி.எஸ்.டி வரியையும் உள்ளடக்கியதே.

மேலும் படிக்க : அன்லிமிட்டட் ஆஃபர்னாலே அது ஏர்டெல் தான்!

Trai Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment