Advertisment

Airtel DTH HD Connection: மலிவு விலையில் ஏர்டெல் டிஜிட்டல் ஹெச்.டி டிவி...

Airtel Digital TV HD Set-Top-Box Price: பாஸ், ஃபார்வேர்டு மற்றும் ரிவைண்ட் அம்சங்களுடன் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது. 

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
airtel-digital-tv

airtel-digital-tv

 Airtel Digital TV Set Up Box Price Today: ஸ்மார்ட்போன்கள் மற்றும் தொலைத் தொடர்பு பொருட்களுக்குப் பிறகு, டி.டி.எச் மற்றும் கேபிள் ஆபரேட்டர்களையும் விலை சரிவு தாக்கியுள்ளது. டி.டி.எச் இணைப்பு வாங்குவது முன்பை விட தற்போது மலிவு விலையில் கிடைக்கிறது. டாடா ஸ்கை, ஏர்டெல் டிஜிட்டல் டிவி, டி2ஹெச் டிஷ் டிவி ஆகியவற்றின் செட்-டாப்-பாக்ஸ்களின் விலைகள் குறைத்துள்ளன.

Advertisment

ஏர்டெல் டிஜிட்டல் டிவி, தங்களின் இணைப்பை மேம்படுத்தும் வகையில், பழைய சந்தாதாரர்களுக்கு மேலும் சலுகைகளை அறிவித்துள்ளது. அவற்றை இங்கே தெரிந்துக் கொள்ளலாம்.

Airtel Digital TV set-top-box-ன் விலை

ஏர்டெல் டிஜிட்டல் டிவி செட்-டாப்-பாக்ஸ் பொதுவான விலை ரூ .1,953. ஆனால் ரூ .500 விலைக் குறைக்கப்பட்ட நிலையில், இப்போது ரூ .1,453 க்கு இதனை பெறலாம். அதோடு பயனாளர்களுக்கு ரூ.1,000 சலுகையையும் வழங்குகிறது ஏர்டெல். அதன்படி 150 சேனல்களைக் கொண்ட, செட்-டாப்-பாக்ஸை இப்போது ரூ .769 க்கு பெறலாம்.

இதில் சேனல் பேக்கின் வழக்கமான கட்டணம் மாதத்திற்கு ரூ 452. இதில் நமது தேவைக்கேற்ப சேனல் பேக்குகளையும் தேர்ந்தெடுக்கலாம். ரூ 769 விலையில் இருக்கும் பேக்கில் என்.சி.எஃப் (நெட்வொர்க் கொள்ளளவு கட்டணம்), இன்ஸ்டாலேஷன் மற்றும் சர்வீஸ் சார்ஜ் உள்ளடக்கப்படுவதில்லை. ஆகையால் அவற்றிற்கு, கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

ஹெச்.டி செட்-டாப்-பாக்ஸ் சில சுவாரஸ்யமான அம்சங்களையும் கொண்டுள்ளது. முதலில், முழு ஹெச்.டி பட தரத்தை இதில் பெற முடியும். இதனால் அதிக குவாலிட்டியில் பிரகாசமான வீடியோக்களை, பிரகாசமான வண்ணங்களில் கண்டு மகிழலாம். டால்பி டிஜிட்டல் பிளஸ்ஸின் சப்போர்ட்டும் இருப்பதால், அட்டகாசமான ஆடியோவையும் அனுபவிக்கலாம். இதில் கேம்ஸ் மற்றும் பிற சேவைகளும் உள்ளன. பாஸ், ஃபார்வேர்டு மற்றும் ரிவைண்ட் அம்சங்களுடன் பிடித்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் இதில் உள்ளது.

ஹெச்.டி செட்-டாப்-பாக்ஸ், இன்டர்நெட் டிவி அப்கிரடேஷன்

எஸ்.டி செட்-டாப் பாக்ஸ் வைத்திருக்கும் ஏர்டெல் டிஜிட்டல் டிவி சந்தாதாரர்கள், ஹெச்டி-க்கு மாற்ற விரும்பினால் ரூ .699 (செட்-டாப் பாக்ஸ்) பிளஸ் ரூ .150 (பொறியாளர் வருகை கட்டணங்கள்) செலுத்த வேண்டும்.  இன்டர்நெட் டிவியை மாற்ற விரும்புவோர் ரூ .1,999 பிளஸ் ரூ .250 (பொறியாளர் வருகை கட்டணம்) செலுத்த வேண்டும்.

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment