Advertisment

அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் சந்தா, கூடுதல் டேட்டா: ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் இங்கே

ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் மாதம் ரூ.599 முதல் தொடங்குகிறது. இது குறித்து இங்கு விரிவாகப் பார்ப்போம்.

author-image
WebDesk
New Update
Airtel
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

ஏர்டெல் இந்தியாவில் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை கொண்டுள்ளது. பெரும்பாலும் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி அதிகம் பேசப்படும் நிலையில் ஏர்டெல்லின் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.  ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகிறது. 

Advertisment

ஏர்டெல் ரூ.599 திட்டம்

ஏர்டெல் பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டங்கள் ரூ.599 முதல் தொடங்குகிறது.  வாடிக்கையாளர்கள் 1 வழக்கமான + 1 கூடுதல் சிம் உடன் மொத்தம் 105 ஜிபி (75 ஜிபி + 30 ஜிபி கூடுதல்) டேட்டாவை இந்த திட்டத்தில் பெறலாம். ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை பெறலாம். 

இந்த திட்டத்தில் டேட்டா ரோல்ஓவர் வசதி 200ஜிபி வழங்கப்படுகிறது. அதோடு  6 மாதங்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ, Wynk பிரீமியம், ஹேண்ட்செட் பாதுகாப்பு மற்றும் 1 வருடத்திற்கு Disney+ ஹாட்ஸ்டார் சந்தா வழங்கப்படுகிறது. 

ஏர்டெல் ரூ.999 திட்டம்

ஏர்டெல் வழங்கும் ரூ.999 திட்டமானது 1 வழக்கமான + 3 கூடுதல் சிம்களுடன் மொத்தம் 190ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 100ஜிபி + 30ஜிபி கூடுதல்), வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 எஸ்எம்எஸ்/நாள் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் அனுமதிக்கப்படுகிறது. அதோடு ஓ.டி.டி தளங்களுக்கான சந்தா வழங்கப்படுகிறது.  6 மாதங்களுக்கு பிரைம் வீடியோ, Wynk பிரீமியம், ஹேண்ட்செட் பாதுகாப்பு மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 1 வருடத்திற்கு இலவசம்.

ரூ.1199 திட்டம்

ரூ.1199 திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 240ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 150ஜிபி + 30ஜிபி கூடுதல்) டேட்டா பெறுவர். வரம்பற்ற குரல் அழைப்பு, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் உடன் 1 வழக்கமான + 3 கூடுதல் சிம்களைப் பெறுகிறார்கள். 

ஏர்டெல் தேங்க்ஸ் ரிவார்டுகள் இந்த திட்டத்துடன் இணைந்து 6 மாதங்களுக்கு Prime Video, Wynk Premium, Handset Protection மற்றும் Disney+ Hotstar ஆகியவை 1 வருட இலவச சந்தா உள்ளது. 

ரூ.1499 திட்டம்

ஏர்டெல் ரூ.1499 போஸ்ட்பெய்ட்  திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 240ஜிபி (ஒவ்வொரு சிம்மிற்கும் 150ஜிபி + 30ஜிபி கூடுதல்) டேட்டா,  அன்லிமிடெட் காலிங் வசதி, 100 எஸ்எம்எஸ் மற்றும் 200ஜிபி டேட்டா ரோல்ஓவர் உடன் 1 வழக்கமான + 4 கூடுதல் சிம்களைப் பெறுகிறார்கள். ஆறு மாதங்களுக்கான Prime Video, Wynk Premium, Handset Protection மற்றும் Disney+ Hotstar 1 வருட இலவச சந்தா இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. 

 

Airtel
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment