Airtel Free Recharge for Low Income Customers Tamil News : பாரதி ஏர்டெல் கடந்த ஞாயிற்றுக்கிழமை, சுமார் 55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக 49 ரூபாய் ரீசார்ஜ் பேக் வழங்குவதாகத் தனது வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது. இது இந்த தொற்றுநோய் காலகட்டத்தின்போது குடும்பத்தினரோடு தொடர்ந்து இணைந்திருக்க உதவும்.
மேலும், ரூ.79 ரீசார்ஜ் கூப்பனை வாங்கும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு நன்மை கிடைக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது.
270 கோடி டாலர் மதிப்புள்ள இந்த சலுகைகள், "55 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு, கோவிட் -19-ன் தாக்கத்தைத் தடுக்க உதவும்" என்று நிறுவனம் கூறியுள்ளது.
ரீசார்ஜ் செய்ய முடியாத ஜியோபோன் பயனர்களுக்கு தொற்றுநோயின் முழு காலத்திற்கும் மாதத்திற்கு 300 இலவச நிமிட வெளிச்செல்லும் அழைப்புகளை (ஒரு நாளைக்கு 10 நிமிடங்கள்) வழங்க ரிலையன்ஸ் பவுண்டேஷனுடன் இணைந்து செயல்படுவதாக ரிலையன்ஸ் ஜியோ கூறிய சில நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல்லின் இந்த ரூ.49 பேக், 28 நாட்கள் செல்லுபடியாகும் 38 ரூபாய் டாக்டைம் மற்றும் 100 எம்பி டேட்டா ஆகியவற்றை வழங்குகிறது. "இந்த பேக், 55 மில்லியனுக்கும் அதிகமான ஏர்டெல் வாடிக்கையாளர்களை, பெரும்பாலும் கிராமப்புறங்களில், இணைந்திருக்கவும், தேவைப்படும்போது முக்கியமான தகவல்களை பரிமாற்றவும் உதவும்" என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அத்தனை நன்மைகளும், வரும் வாரத்தில் வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil