அன்லிமிடெட் 5ஜி, இலவச ஓ.டி.டி சந்தா: ஏர்டெலின் அசத்தல் திட்டங்களைப் பாருங்க

ஏர்டெல் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வரும் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

ஏர்டெல் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் வரும் திட்டங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel

Airtel

ஏர்டெல் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும். பயனர்களின் வசதிக்கு ஏற்ப ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. அந்த வகையில் நிறுவனம் வழக்கமான டேட்டா திட்டங்களுடன் அன்லிமிடெட் 5ஜி மற்றும் ஓ.டி.டி சந்தாக்களை வழங்குகிறது. அதுகுறித்து இங்கு பார்ப்போம்.

Advertisment

ஏர்டெல் ரூ.2999 திட்டம்

இந்த திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது. தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் தினசரி 100 எஸ்.எம்.எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. இவை தவிர, இந்த திட்டத்தில் Apollo 24/7 Circle, FASTag இல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music ஆகியவை வழங்கப்படுகிறது. நீண்ட கால வேலிடிட்டி மற்றும் தடையில்லா அதிவேக இன்டர்நெட் பயன்படுத்த இத்திட்டம் சிறந்ததாக இருக்கும்.

ஏர்டெல் ரூ.839 திட்டம்

Advertisment
Advertisements

இந்த திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும் மற்றும் தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் காலிங் தவிர, இந்த திட்டம் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. இந்த திட்டம் 3 மாதங்களுக்கு Disney+ Hotstar மொபைல், Xstream பயன்பாடு, RewardsMini சந்தா, Apollo 24/7 Circle, FASTagல் ரூ.100 கேஷ்பேக், இலவச Hellotunes மற்றும் Wynk Music இலவசம். டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா திரைப்படங்கள் மற்றும் டிவி நிகழ்ச்சிகளைப் பார்ப்பவர்களுக்கு ஒரு சிறந்த திட்டமாகும்.

ஏர்டெல் ரூ. 549 திட்டம்

ரூ.549 திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை 56 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது. வழக்கமான வரம்பற்ற 5G டேட்டா மற்றும் குரல் அழைப்பு பலன்களுடன், இந்த திட்டம் 100 SMS/நாள் வழங்குகிறது. இந்த திட்டம் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப்ஸ், அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஃபாஸ்டேக்கில் ரூ. 100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஃப்ரீ ஆகியவற்றுடன் வருகிறது.

ஏர்டெல் ரூ.319 திட்டம்

ஏர்டெல் வழங்கும் 2ஜிபி தினசரி டேட்டா திட்டத்தில் இது மிகவும் மலிவானது. இந்த திட்டம் 1 மாதம் செல்லுபடியாகும் மற்றும் வரம்பற்ற 5G டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் 100 SMS/நாள் ஆகியவற்றை வழங்குகிறது. இந்த பலன்களுடன், அப்பல்லோ 24/7 சர்க்கிள், ஃபாஸ்டேக்கில் ரூ.100 கேஷ்பேக், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் இலவசம் ஆகியவை திட்டத்தில் அடங்கும். தினசரி டேட்டா உபயோகம் குறைவாக இருப்பவர்களுக்கும் பட்ஜெட்டுக்கு ஏற்ற திட்டம் தேவைப்படுபவர்களுக்கும் இந்தத் திட்டம் ஏற்றதாக இருக்கும்.

ஏர்டெல் தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 5 திட்டங்களைக் கொண்டுள்ளது. அவை விலை, வேலிடிட்டிக்கு ஏற்ப பலன்களை வழங்கி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: