இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமானது இன்-ஃப்ளைட் ரோமிங் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இது விமானப் பயணத்தின் போது அதிவேக இணைய சேவை, காலிங் வசதி ஆகியவை வழங்குகிறது. இந்த நிஃப்டி டேட்டா பேக்குகள் மூலம், நீங்கள் சமூக ஊடகங்களை ஸ்க்ரோல் செய்யலாம், வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்யலாம் மற்றும் உங்கள் பணியைக் கூட செய்யலாம்.
சேவையை இயக்க, ஏர்டெல் ஏரோமொபைலுடன் இணைந்து விமானத்தின் சொந்த தகவல் தொடர்பு அமைப்புகளைப் பயன்படுத்துகிறது. இந்த திட்டங்கள் 19 சர்வதேச விமான நிறுவனங்களை உள்ளடக்கியது, எனவே நீங்கள் எந்த ஜெட் விமானத்தில் பறந்தாலும் இந்த திட்டத்தை பயன்படுத்தலாம்.
ரூ.195 முதல் திட்டம் தொடங்குகிறது. 250 எம்.பி டேட்டா, 100 நிமிட காலிங் வசதி மற்றும் 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. 24 மணி நேர வேலிடிட்டி கொண்டது. இதில் 3 ப்ரீபெய்ட் திட்டம் , 3 போஸ்ட்பெய்ட் திட்டம் வருகிறது. அனைத்தும் 24 மணி நேர வேலிடிட்டி கொண்டதாகும். ரூ.295 திட்டம் 500 எம்.பி டேட்டா, 100 நிமிட காலிங் வசதி மற்றும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ரூ.595 திட்டமானது 1ஜிபி டேட்டாவையும் அதே 100 நிமிடங்கள்/எஸ்எம்எஸ்களையும் வழங்குகிறது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் இரண்டும் ஒரே திட்டம், ஒரே விலையில் வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“