இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு சேவை வழங்குநர்களில் ஒன்றான ஏர்டெல், தனது சில ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் விபத்து காப்பீட்டை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் ரூ.239, ரூ.399. மற்றும் ரூ.969 ஆகிய 3 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு காப்பீடு வழங்குகிறது. ஐசிஐசிஐ லோம்பார்ட் மூலம் நிறுவனம் காப்பீடு வழங்குகிறது.
ரீசார்ஜ் மற்றும் காப்பீடு விவரம்
ரூ.239 திட்டம்
ஏர்டெல் ரூ.239 திட்டமானது அன்லிமிடெட் வாயிஸ் காலிங், 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.
இந்த திட்டத்தில் விபத்துக் காப்பீடாக விபத்தில் உயிரிழப்போருக்கு ரூ.1 லட்சம், காயமடைந்தோர் 30 நாட்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ரூ.25,000மும் வழங்கப்படுகிறது.
ரூ.399
ஏர்டெல் ரூ.399 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 2ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்திலும் அதே விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
ரூ.969
ஏர்டெல் ரூ.959 திட்டமானது வரம்பற்ற குரல் அழைப்பு, 1.5ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது. ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் செல்லுபடியாகும்.இந்த திட்டத்திலும் அதே விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“