ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், நிறுவனம் அதன் ரூ.395 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் வேலிடிட்டியை உயர்த்தியுள்ளது. 56 நாட்களில் இருந்த வேலிடிட்டியை 70 நாட்களாக உயர்த்தியுள்ளது. இந்த திட்டத்தின் மற்ற பலன்கள் அப்படியே உள்ளது. ஜியோவும் இதே விலையில் திட்டத்தை வழங்குவதால் அதற்கு போட்டியாக ஏர்டெல் அறிவித்திருப்பதாக தெரிகிறது. இருப்பினும் ஜியோவின் வேலிடிட்டி இதை விட அதிக நாட்கள் ஆகும்.
ஏர்டெல் ரூ.395 திட்டம்
ஏர்டெல் வழங்கும் ரூ.395 திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, மொத்தமாக 600 எஸ்.எம்.எஸ் மற்றும் 6ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா இல்லை. முன்னதாக இந்த திட்டத்திற்கு 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்பட்டது. ஆனால் இது குறைந்த பலன்களுடன் குறைந்த வேலிடிட்டி உடன் விலை உயர்ந்த திட்டமாக இருந்தது. இந்நிலையில் நிறுவனம் இதன் வேலிடிட்டி காலத்தை 70 நாட்களாக அதிகரித்துள்ளது. இப்போது அதே விலையில் இன்னும் இரண்டு வாரம் கூடுதல் வேலிடிட்டி பெறலாம்.
ஜியோ 84 நாட்கள் வேலிடிட்டி
ஜியோவில் இதே ரூ.395 திட்டமான ஏர்டெல்லை விட கூடுதல் பலன்களையும், கூடுதல் வேலிடிட்டியையும் வழங்குகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் வசதி, மொத்தமாக 600 எஸ்.எம்.எஸ் மற்றும் 6ஜிபி டேட்டா வசதியுடன் அன்லிமிடெட் 5ஜி சேவையும், 84 நாட்கள் வேலிடிட்டியையும் ரிலையன்ஸ் ஜியோ வழங்குகிறது.