ஏர்டெல் உங்களுக்காக அளிக்கும் மூன்று சூப்பர் இண்டெர்நேசனல் பேக்குகள்!

அதன் வேலிடிட்டி பீரியடில் உள்ளூர் அழைப்புகளின் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டும் இலவசம்.

அதன் வேலிடிட்டி பீரியடில் உள்ளூர் அழைப்புகளின் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டும் இலவசம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Airtel International Prepaid plans

Airtel International Prepaid plans start at Rs 196 : தற்போது இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று படிப்பவர்கள் மற்றும் வேலை செய்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு முறையும் அங்கிருப்பவர்களை போனில் அழைக்கும் போது, முதலில் ஞாபகத்திற்கு வருவது என்னவோ போன் பில் தான். ஒரு பத்து நிமிசம் பேசினால் 100 ரூபாய் முடிந்துவிடும் என்ற அளவில் இருக்கும்.

Airtel International Prepaid plans

Advertisment

அதற்கு தற்போது தீர்வாக அமைந்துள்ளது ஏர்டெலின் புதிய மூன்று ஆஃபர்கள். ரூபாய் 196க்கு போன் வெளிநாடுகளில் இருப்பவர்களிடம் 10 நிமிடம் வரை பேசிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 1 நாள் மட்டுமே.

296 ரூபாய்க்கான ஏர்டெல் ப்ரீபெய்ட் ஆஃபரில் 40 நிமிடங்கள் வரை பேசிக் கொள்ளலாம். இதன் வேலிடிட்டி 30 நாட்களாகும்.

446 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 75 நிமிடங்களுக்கு பேசிக் கொள்ளலாம். இந்த பேக்கின் வேலிடிட்டி 90 நாட்களாகும்.

Advertisment
Advertisements

இந்த மூன்று பேக்குகளிலும், அதன் வேலிடிட்டி பீரியடில் உள்ளூர் அழைப்புகளின் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் இரண்டும் இலவசம்.

இந்த மூன்று பேக்குகளுக்கும் டேட்டா வசதி இல்லை.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஃப்ரான்ஸ், ஹாங்காங், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர், நெதர்லாந்து, நேபாளம், வங்கதேசம், இலங்கை, சௌதி அரேபியா, அமீரகம், கத்தார், குவைத், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளில் உள்ளோருக்கு இந்த பேக்குகள் மூலம் அழைப்புகள் மேற்கொள்ளலாம்.

மேலும் படிக்க : டாக் டைம் ஆஃபர்கள் Vs காம்போ பேக்குகள் - இதில் எது சிறந்தது ?

Airtel

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: