ஏர்டெல் இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட் என திட்டங்களை வழங்கி வருகிறது. குறிப்பாக அன்லிமிடெட் திட்டங்களை வழங்குகிறது. நாடு முழுவதும் 5ஜி சேவையை விரிவு படுத்தி வருகிறது. ஏர்டெல் ட்ரூ 5ஜி என்ற பெயரில் 5ஜி சேவையை வழங்குகிறது.
இந்நிலையில், ஏர்டெல் மீண்டும் ரூ.99 திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. குறைந்த பட்ச ரீசார்ஜ் திட்டமாக இருந்த நிலையில் ஏர்டெல் இந்த திட்டத்தின் விலையை உயர்த்தியது. ரூ.155 என குறைந்த பட்ச ரீசார்ஜ் விலையை நிர்ணயித்தது. இந்நிலையில், மீண்டும் ரூ.99 திட்டம் அறிமுகம் செய்யப்பட்டாலும் இதில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. இது முன்பு போல் ரீசார்ஜ் திட்டமாக இல்லை. Add-on திட்டமாக உள்ளது.
ரூ.99 டேட்டா திட்டம்
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.99 அன்லிமிடெட் டேட்டா பேக், பயனர்களின் தினசரி டேட்டா வரம்பு முடிந்த பின் கூடுதல் திட்டமாக பயன்படுத்தலாம். ரூ.99 டேட்டா திட்டம் 1 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் டேட்டா பேக் வழங்குகிறது.
இருப்பினும், Fair Usage Policy (FUP) படி 30ஜிபி அதிவேக டேட்டா பயன்படுத்தலாம். தொடர்ந்து நீங்கள் 5ஜி பயனராக இருந்தால் எவ்வித உச்ச வரம்பும் இல்லாமல் அன்லிமிடெட் டேட்டாவை 1 நாள் முழுவதும் பயன்படுத்தலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil