Airtel Jio VI best unlimited prepaid plans under Rs500 Tamil News : ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகியவற்றின் விலை உயர்வு இப்போது நமக்குப் பின்னால் உள்ளது. ஆனால், சமீபத்திய வாரங்களில் சில புதிய திட்டங்களைச் சேர்ப்பது இதனை மீண்டும் மாற்றியுள்ளது. இவற்றில் புதிதாக சேர்க்கப்பட்ட திட்டங்கள் மற்றும் பழைய உயர்வுக்கு முந்தைய திட்டங்கள் குறைக்கப்பட்ட செல்லுபடியாகும் காலம் ஆகியவை அடங்கும்.
ரூ.500-க்கு கீழ் உள்ள மூன்று முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்கள் ஒவ்வொன்றிலும் நீங்கள் பெறக்கூடிய அனைத்து சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களையும் இங்கே பார்க்கலாம். இதில் தினசரி டேட்டா திட்டங்கள் மற்றும் நிலையான மொத்த டேட்டா திட்டங்களும் அடங்கும். இருப்பினும், அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளுடன் கூடிய ப்ரீபெய்ட் திட்டங்களை மட்டுமே நாம் பார்க்கப்போகிறோம்.
ஏர்டெல்

ஏர்டெல் உங்களுக்கு அன்லிமிடெட் அழைப்பு மற்றும் டேட்டா பலன்களை வழங்கும் ரூ.500-க்கு கீழ் மூன்று திட்டங்களை வழங்குகிறது. 28 நாட்களுக்கு தினசரி 2.5 ஜிபி டேட்டாவுடன் வரும் ரூ.449 திட்டமும் மற்றும் 56 நாட்களுக்கு 1.5 ஜிபி டேட்டாவுடன் வரும் ரூ.479 திட்டமும் உள்ளது.
நீண்ட கால செல்லுபடியை விரும்புவோர் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் ரூ.455 திட்டத்தையும் தேர்வு செய்யலாம். ஆனால், 6ஜிபி டேட்டாவை மட்டுமே வழங்குகிறது (தினமும் புதுப்பிக்கப்படாது).
வோடபோன் ஐடியா</strong>

வோடபோன் ஐடியா இந்த பிரிவில் அதிக எண்ணிக்கையிலான திட்டங்களை வழங்குகிறது. 28 நாட்களுக்கு 2.5GB தினசரி டேட்டாவை வழங்கும் ரூ.409 திட்டமும், 28 நாட்களுக்கு 3GB தினசரி டேட்டாவை வழங்கும் ரூ.475 திட்டமும் உள்ளன.
56 நாட்களுக்கு 1.5ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ரூ.479 திட்டமும், ரூ.459 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும் ஆனால் வரையறுக்கப்பட்ட 6ஜிபி டேட்டாவுடன் (தினமும் புதுப்பிக்கப்படாது) உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ</strong>

ரிலையன்ஸ் ஜியோ இந்த பிரிவில் மூன்று திட்டங்களை வழங்குகிறது. 3ஜிபி தினசரி டேட்டாவை வழங்கும் ரூ.419 திட்டமும், 56 நாட்களுக்கு 1.5ஜிபி வழங்கும் ரூ.479 திட்டமும் இதில் அடங்கும்.
ஜியோ சமீபத்தில் புதிய ரூ.499 திட்டத்தைச் சேர்த்தது. இது இந்த வகையில் மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஆனால், இது நிறைய சலுகைகளையும் வழங்குகிறது. இதில் ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவுடன் 28 நாட்களுக்கு தினசரி 2ஜிபி டேட்டாவும் அடங்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil