ஏர்டெல், ஜியோ, வி ரீசார்ஜ் : இந்த அன்லிமிடெட் ப்ரீபெய்ட் திட்டங்கள் பற்றி தெரியுமா?

Airtel Jio VI recharge guide all unlimited prepaid plans Tamil News இந்த பட்டியலில் பேச்சு நேர திட்டங்கள் மற்றும் டேட்டா பூஸ்டர் திட்டங்களை நீங்கள் காண முடியாது.

Airtel Jio VI recharge guide all unlimited prepaid plans Tamil News
Airtel Jio VI recharge guide all unlimited prepaid plans Tamil News

Airtel Jio VI recharge guide all unlimited prepaid plans Tamil News : இந்திய டெலிகாம் ஆபரேட்டர்களான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) அனைத்தும் கடந்த மாத இறுதியில் தங்கள் ப்ரீபெய்ட் திட்ட விலைகளை உயர்த்தியுள்ளன. தற்போது புதிய விலை அமலுக்கு வந்துள்ள நிலையில், ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களும் தற்போது உயர்த்தப்பட்ட விலையினால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப புதிய திட்டங்களை அறிவிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தத் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் வழங்கும் அனைத்து புதிய ப்ரீபெய்ட் திட்டங்களையும் இங்கே பார்க்கலாம். டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் பலன்களை வழங்கும் அன்லிமிடெட் அழைப்பு திட்டங்களை மட்டுமே இங்கு உள்ளன. எனவே, இந்த பட்டியலில் பேச்சு நேர திட்டங்கள் மற்றும் டேட்டா பூஸ்டர் திட்டங்களை நீங்கள் காண முடியாது.

ஏர்டெல்

ஏர்டெல் இப்போது 1ஜிபி டேட்டா (மொத்தம்) மற்றும் 24 நாட்கள் வேலிடிட்டியுடன் ரூ.155 திட்டத்தை வழங்குகிறது. 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.179 திட்டமும், 84 நாட்களுக்கு 6ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.455 திட்டமும் உள்ளது.

நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா திட்டத்திற்கு வரும் ஏர்டெல் ரூ.209 திட்டத்தில் 1ஜிபி டேட்டாவை 21 நாட்களுக்கு வழங்குகிறது. ஒரு நாளைக்கு 1 ஜிபி டேட்டாவை 24 நாட்களுக்கு வழங்கும் ரூ.239 திட்டமும் உள்ளது. ரூ.265 திட்டத்தில் 1ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டா திட்டங்களுக்குச் செல்லும்போது, ​​ரூ.299 திட்டமானது 28 நாட்களுக்கும், ரூ.479 திட்டமானது 56 நாட்களுக்கும், புதிய ரூ.666 திட்டமானது 77 நாட்களுக்கும். ரூ.719 திட்டமானது 84 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா திட்டங்களுக்கு, ரூ.359 திட்டத்தை ஏர்டெல் வழங்குகிறது. இது 28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ரூ.549 திட்டத்தை 56 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் ரூ.839 திட்டத்தை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

ஏர்டெல் ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்கும் ரூ.449 திட்டத்தையும் வழங்குகிறது. ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா, 28 நாட்களுக்கு ஏர்டெல் ரூ.599 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.699 திட்டத்தையும் கொண்டுள்ளது. மேலே உள்ள அட்டவணையில் நீங்கள் காணக்கூடிய சில வருடாந்திர திட்டங்களையும் ஏர்டெல் கொண்டுள்ளது.

வோடபோன் ஐடியா

வோடபோன் ஐடியா 18 நாட்களுக்கு ரூ.129, 200எம்பி டேட்டா திட்டத்தை (மொத்தம்) வழங்குகிறது. ரூ.149 திட்டம் 1ஜிபி டேட்டா (மொத்தம்) 21 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.155 திட்டம் 1ஜிபி டேட்டா (மொத்தம்) 24 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.179 திட்டம் 28 நாட்களுக்கு 2ஜிபி டேட்டா (மொத்தம்) மற்றும் 84 நாட்களுக்கு 6ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.459 திட்டமும் உள்ளன.

56 நாட்களுக்கு 4ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.329 திட்டமும், 30 நாட்களுக்கு 25ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.327 திட்டம், 60 நாட்களுக்கு 50ஜிபி டேட்டா (மொத்தம்) வழங்கும் ரூ.537 திட்டமும் உள்ளது.

ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டா திட்டங்களுக்கு, Vi-ல் 18 நாட்களுக்கு ரூ.199 திட்டம், 21 நாட்களுக்கு ரூ.219 திட்டம், 24 நாட்களுக்கு ரூ.239 திட்டம் மற்றும் 28 நாட்களுக்கு ரூ.269 திட்டம் உள்ளது.

ஒரு நாளைக்கு 1.5ஜிபி டேட்டாவிற்கு, Vi ஆனது 21 நாட்களுக்கு ரூ.249 திட்டத்தையும், 42 நாட்களுக்கு ரூ.399 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.479 திட்டத்தையும், 70 நாட்களுக்கு ரூ.599 திட்டத்தையும், 77 நாட்களுக்கு ரூ.666 திட்டத்தையும் வழங்குகிறது. 84 நாட்களுக்கு ரூ.719 திட்டம் உள்ளது.

ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா திட்டங்களுக்கு, 28 நாட்களுக்கு ரூ.359 திட்டத்தையும், 56 நாட்களுக்கு ரூ.539 திட்டத்தையும், 84 நாட்களுக்கு ரூ.839 திட்டத்தையும் வழங்குகிறது.

28 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டாவுக்கு ரூ.409 திட்டமும், ரூ.475 திட்டத்துடன் 28 நாட்களுக்கு 3ஜிபி டேட்டாவும், ரூ.699 திட்டத்தில் 56 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டாவும், ரூ.901. 70 நாட்களுக்கு 3ஜிபி டேட்டா வழங்கும் திட்டமும் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு டேட்டா தேவைகளுக்காகப் பல திட்டங்களைக் கொண்டுள்ளது.

ஒரு நாளைக்கு 1ஜிபி டேட்டாவிற்கு, 20 நாட்களுக்கு ரூ.149 திட்டத்தையும், 24 நாட்களுக்கு ரூ.179 திட்டத்தையும், 28 நாட்களுக்கு ரூ.209 திட்டத்தையும் ஜியோ வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாவிற்கு, ரூ.119 திட்டத்தை 14 நாட்களுக்கும், ரூ.199 பிளானை 23 நாட்களுக்கும், ரூ.239 பிளானை 28 நாட்களுக்கும், ரூ.479 பிளானை 56 நாட்களுக்கும், ரூ.666 பிளானை 84 நாட்களுக்கும் ஜியோ வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டாவிற்கு, ரூ.249 திட்டத்தை 23 நாட்களுக்கும், ரூ.299 திட்டத்தை 28 நாட்களுக்கும், ரூ.533 திட்டத்தை 56 நாட்களுக்கும், ரூ.719 திட்டத்தை 84 நாட்களுக்கும் ஜியோ வழங்குகிறது.

ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவிற்கு, 28 நாட்களுக்கு ரூ.419 திட்டத்தையும், 28 நாட்களுக்கு ரூ.601 திட்டத்தையும், 84 நாட்களுக்கு ரூ.1199 திட்டத்தையும் ஜியோ  வழங்குகிறது. மேலே உள்ள அட்டவணையில் உள்ள மற்ற எல்லா திட்டங்களையும் பார்க்கவும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Technology news here. You can also read all the Technology news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Airtel jio vi recharge guide all unlimited prepaid plans tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express