Airtel Jio Vodafone Idea prepaid plans Disney Hotstar Amazon Prime video subscriptions Tamil News : ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களாக தங்களுடைய ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியுள்ளன. டிசம்பர் 1 முதல், இந்தியாவில் உள்ள இந்த மூன்று முக்கிய டெலிகாம் ஆபரேட்டர்களுக்கும் உயர்த்தப்பட்ட புதிய விலைகள் நடைமுறையில் உள்ளன. இருப்பினும், மூன்று டெலிகாம் ஆபரேட்டர்களும் அனைத்து முக்கிய ப்ரீபெய்ட் திட்டங்களின் புதிய விலைகள் மற்றும் நன்மைகளை விவரித்திருந்தாலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் வீடியோ போன்ற OTT இயங்குதளங்களுக்கான சந்தாக்களை உள்ளடக்கிய தொகுக்கப்பட்ட திட்டங்களைப் பற்றி மக்களுக்கு இன்னும் உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
இந்த மூன்று ஆபரேட்டர்களாலும், அனைத்து திட்டங்களின் புதிய பட்டியலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். அவற்றைக் கீழே பார்க்கவும்.
டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோவுடன் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள்
ஏர்டெல் தற்போது அதன் விலை உயர்வுக்குப் பிறகு சில திட்டங்களை வழங்குகிறது. அவை தொகுக்கப்பட்ட சந்தாக்களுடன் அழைப்பு/டேட்டா நன்மைகளை வழங்குகிறது. 6ஜிபி மொத்த டேட்டாவுடன் ரூ.108 ஆட்-ஆன் திட்டம் உள்ளது. இது, ஏற்கனவே உள்ள உங்கள் திட்டத்தைப் போன்றே செல்லுபடியாகும். இந்த திட்டம் 30 நாட்களுக்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவையும் வழங்குகிறது.
ரூ.599 திட்டமானது ஒரு நாளைக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஆகியவற்றை வழங்குகிறது. ரூ.838 திட்டம் ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
வருடாந்திர ரூ.3,359 திட்டமானது ஒரு நாளைக்கு 2ஜிபி, அன்லிமிடெட் அழைப்புகள், 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்குகிறது.
ஏர்டெல், ரூ.359 திட்டத்தையும் வழங்குகிறது. இது ஒரு நாளைக்கு 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 28 நாட்களுக்கு அமேசான் பிரைம் வீடியோ மொபைல் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது. அன்லிமிடெட் அழைப்புகள், 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் 56 நாட்களுக்கு அமேசான் பிரைம் சந்தாவுடன் ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டாவை வழங்கும் ரூ.699 திட்டமும் உள்ளது.
டிஸ்னி+ஹாட்ஸ்டாருடன் ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்
விலை உயர்வுக்குப் பிறகு, ரிலையன்ஸ் ஜியோ ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தை மட்டுமே வழங்குகிறது. அது தொகுக்கப்பட்ட சந்தாவைக் கொண்டுள்ளது. இது ரூ.601 திட்டமாகும். 90ஜிபி மொத்த டேட்டா, அன்லிமிடெட் அழைப்புடன் இந்த பேக் 28 நாட்கள் செல்லுபடியாகும். ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா உள்ளது.
டிஸ்னி+ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் வீடியோவுடன் வோடபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள்
வோடபோன் ஐடியா விலை உயர்வுக்குப் பிறகு நான்கு திட்டங்களை வழங்குகிறது. அவை தொகுக்கப்பட்ட சந்தாக்களுடன் வருகின்றன. இவற்றில் மிகவும் மலிவு விலை ரூ.501 திட்டமாகும். இது நாள் ஒன்றுக்கு 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள், 28 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
ஒரு நாளைக்கு 3ஜிபி, அன்லிமிடெட் அழைப்புகள், 56 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை வழங்கும் ரூ.701 திட்டமும் உள்ளது.
ரூ.901 திட்டம் ஒரு நாளைக்கு 3 ஜிபி மற்றும் 84 நாட்களுக்கு அன்லிமிடெட் அழைப்புகளை வழங்குகிறது மற்றும் Disney+ Hotstar-க்கான ஒரு வருட சந்தாவையும் உள்ளடக்கியுள்ளது. இறுதியாக, ரூ.3,099 திட்டம் ஒரு நாளைக்கு 1.5ஜிபி, அன்லிமிடெட் அழைப்புகள், 365 நாட்கள் வேலிடிட்டி மற்றும் ஒரு வருடத்திற்கு டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தா ஆகியவற்றை வழங்குகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil