மாதம் ரூ200 போதும்: யாருல்லாம் அன்லிமிடெட் கால், டேட்டா தர்றாங்கன்னு பாருங்க!

Airtel Jio and Vi Rs.200 prepaid plans ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவற்றிலிருந்து ரூ.200-க்கு கீழ் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி டேட்டாவை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியல்

By: December 2, 2020, 8:36:29 AM

Airtel Jio Vi Prepaid Plans Tamil News : பரவிவரும் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக நம்மில் பெரும்பாலோர் வீட்டிலிருந்து வேலை செய்கிறோம். பலர் ஏற்கெனவே தங்கள் வீடுகளில் வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பு நிறுவப்பட்டுள்ள காரணத்தால் அவர்களுக்குத் தினசரி டேட்டா ஜிபி தேவையில்லை. இருப்பினும், அவர்கள் வீட்டை விட்டு வெளியே இருக்கும்போதும் அன்லிமிடெட் அழைப்புகள் மற்றும் வரையறுக்கப்பட்ட டேட்டா போன்ற அம்சங்கள் அவர்களுக்குத் தேவைப்படலாம். அத்தகைய பயனர்களுக்காக, இந்தியாவின் மூன்று பெரிய தொலைதொடர்பு சேவை வழங்குநர்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் ஐடியா (Vi) ஆகியவற்றிலிருந்து ரூ.200-க்கு கீழ் அன்லிமிடெட் அழைப்பு மற்றும் தினசரி டேட்டாவை வழங்கும் சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலை இனி பார்க்கலாம்.

ஏர்டெல் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே அன்லிமிடெட் அழைப்பு வசதியையும், 1.5 ஜிபி தினசரி டேட்டவையும் ஏர்டெல் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 100 தினசரி எஸ்எம்எஸ், இலவச அன்லிமிடெட் ஹலோ ட்யூன்கள், விங்க் மியூசிக் அணுகல் மற்றும் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் சேவைக்கான அணுகல் ஆகியவை உள்ளன. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

கொடுக்கப்பட்டுள்ள டேட்டாவில் சிறிது மாற்றம் செய்ய நீங்கள் தயாராக இருந்தால், ரூ.179 திட்டத்தையும் பெறலாம். இது அதேபோன்ற நன்மைகளுடன் வருகிறது. ஆனால், மொத்த டேட்டா அளவு 2 ஜிபி மற்றும் 300 எஸ்எம்எஸ் மட்டுமே கிடைக்கும். இது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்தத் திட்டத்துடன் நீங்கள் பெறும் கூடுதல் போனஸ், பாரதி ஆக்சாவிடமிருந்து எந்த மருத்துவ பரிசோதனைகள் அல்லது காகித வேலைகள் இல்லாமல் ரூ.2,00,000 கவரேஜ் தொகையுடன் ஆயுள் காப்பீடு கொடுக்கப்படும். ரீசார்ஜ் காலத்திற்கு மட்டுமே காப்பீடு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.199 திட்டத்தின் கீழ், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 1.5 ஜிபி தினசரி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் ஜியோ முதல் ஜியோ அழைப்பு வசதி, பிற நெட்வொர்க்குகளை அழைக்க 1,000 FUP நிமிடங்கள் மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ் ஆகியவை அடங்கும். இந்த திட்டத்தில் ஜியோ டிவி, ஜியோசாவ்ன் மற்றும் பல ஜியோவின் அனைத்து ஆன்லைன் பயன்பாடுகளுக்கான அணுகலும் அடங்கும்.

Vi ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்

Vi அதன் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டத்தின் கீழ் ஒரு நாளைக்கு 1 ஜிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது. 1 ஜிபி தினசரி டேட்டாவுடன், இந்த திட்டம் உண்மையிலேயே அன்லிமிடெட் டேட்டா மற்றும் 100 தினசரி எஸ்எம்எஸ்ஸுடன் தொகுக்கப்பட்டுள்ளது. இது தவிர, Vi மூவிஸ் மற்றும் டிவி அணுகளும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Technology News by following us on Twitter and Facebook

Web Title:Airtel jio vodafone idea prepaid plans under rs 200 tamil news

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X