ஏர்டெல் நிறுவனம் ஸ்பேம் கால்களை கண்டறிந்து தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளது. இதுகுறித்து ஏர்டெல் தமிழ்நாடு பிரிவின் மார்க்கெட்டிங் குழு தலைவர் சந்தீப் கூறுகையில், "பயனர்களுக்கு ஒரு நாளைக்கு 3 ஸ்பேம் அழைப்புகள் ஆவது வருகிறது. இதை தடுக்க ஏ.ஐ தொழில்நுட்பத்துடன் புதிய அம்சம் அறிமுகம் செய்யப்படுகிறது. Suspected Spam அம்சம் முதல் முறையாக அறிமுகம் செய்யப்படுகிறது. அதன்படி ஸ்பேம் அழைப்பு எனக் கண்டறியப்பட்ட நம்பர்களை எடுத்து அதை ஆய்வு செய்து அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என அறிந்து அந்த எண் Suspected Spam எனக் குறிக்கப்படுகிறது.
இவ்வாறு செய்யும் போது பயனருக்கு இந்த எண்ணில் இருந்து அழைப்பு வரும் போது திரையில் Suspected Spam எனக் குறிப்பிட்டு காட்டப்படும். தமிழிலும் இது குறிப்பிடப்படும். இதன் மூலம் பயனர்கள் முன்னெச்சரிக்கை செய்யப்படுகிறார்கள்.
அழைப்பு மட்டுமல்ல எஸ்.எம்.எஸ்சிலும் இது போன்று செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில் இது இலவசமாக செய்யப்படுகிறது. 3 கோடி ஏர்டெல் வாடிக்கையாளர்கள் பயன்பெறுகின்றனர். இந்த வசதியை பயன்படுத்த தனியாக செயலி எதுவும் டவுன்லோடு செய்யத் தேவையில்லை.
Courtesy: சன்நியூஸ்
மெசேஜ் பொறுத்தவரையில் ஸ்பேம் மெசேஜ்களுக்கு லிங்க் அனுப்பபடும். இந்த ஹெபர் லிங்க்களையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். இந்த லிங்க்கள் கொண்டு மெசேஜ் வரும் போது Suspected Spam எனக் குறிப்பிட்டு காட்டப்படும்" என்று அவர் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“