இந்தியாவில் உள்ள மூன்று தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பார்தி ஏர்டெல், ப்ரீபெய்டு பயனர்களுக்கு 3 லிமிடெட் டைம் ரீசார்ஜ் ஆஃபர்களை நேற்று அறிவித்தது.
பண்டிகை கால சிறப்பு ஆஃபராக இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இலவச ஓ.டி.டி தளங்ளுக்கான அணுகல், அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டா, எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவைகளை அறிவித்துள்ளன. இந்த திட்டங்களை செப்.6 முதல் செப்.11 வரை மட்டுமே பெற முடியும். இந்த நாட்களில் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும்.
இந்தப் பட்டியலில் மிகவும் குறைந்த விலை திட்டமான ரூ.979 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2ஜிபி மொபைல் டேட்டா போன்ற பலன்களை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும்.
அடுத்ததாக ரூ.1,029 திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 2ஜிபி மொபைல் டேட்டா மற்றும் 84 நாட்களுக்கு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. இந்த திட்டத்தில் 3 மாதங்களுக்கு இலவச Disney+Hotstar சந்தாவையும் பெறலாம்.
பட்டியலில் உள்ள மிகவும் விலையுயர்ந்த திட்டம் ரூ. 3,599 மற்றும் வருடாந்திர திட்டத்தை எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இது ஏற்றது. 365 நாட்கள் வேலிடிட்டியுடன், அன்லிமிடெட் வாய்ஸ் கால், 2ஜிபி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் வருகிறது.
அதோடு இந்த அனைத்து திட்டங்களிலும் அன்லிமிடெட் 5ஜி, Wynk மியூசிக், Apollo 24|7 Circle 3 மாத வேலிடிட்டியில் கிடைக்கும். பண்டிகை சலுகையின் ஒரு பகுதியாக, ஏர்டெல் 22க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்கள் Sony LIV, Lionsgate Play, Aha, Chaupal, Hoichoi, SunNxt போன்றவற்றை Airtel Xstream Play Premium ஆப் மூலம் இலவசமாக பயன்படுத்தலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“