scorecardresearch

’17 ஓடிடி சேவைகள்’ ஏர்டெலின் ஆல்-இன்-ஒன் ஜாக்பாட் திட்டம்

ஏர்டெலின் அனைத்து புதிய திட்டங்களும் ‘அன்லிமிடெட்’ பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பும், ஏர்டெல் பிளாக் வசதியுடன் கிடைக்கின்றன.

Airtel launch 5G services in chennai
ஏர்டெல் 5ஜி சேவை

ஏர்டெல் நிறுவனம் வீட்டிற்கான பிராண்ட்பேண்ட் இன்டர்நெட், ஓடிடி சேவைக்கான சந்தா, டிவி சேனல், ஏர்டெல் பிளாக் கேர் என அனைத்து சேவைகளும் அடங்கிய ஆல் இன் ஒன் திட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய ஏர்டெல் பிராட்பேண்ட் சலுகைகள் விலை முறையே ரூ. 699, ரூ. 1099 மற்றும் ரூ. 1599 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது

ஏர்டெலின் ரூ699 திட்டத்தில் 40Mbps வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவையுடன், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கின்றன. ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் சோனிலிவ், லயன்ஸ்கேட், ஹொய்சொய், மனோரமாமேக்ஸ், ஷீமாரூ, அல்ட்ரா, ஹங்காமாபிளே, டிவோடி.வி., க்ளிக், நம்மஃப்ளிக்ஸ், டாலிவுட் மற்றும் ஷார்ட்ஸ் டி.வி என 14 ஓடிடி சேவைகளின் சந்தா வழங்கப்படுகிறது. ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸ்-இல் 350-க்கும் அதிக டி.வி. சேனல்களையும் பார்த்து ரசிக்கலாம்.

ஏர்டெலின் ரூ1,099 திட்டத்தில் 200Mbps வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவையுடன், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கின்றன. இந்த திட்டத்திலும் மேலே குறிப்பிட்டுள்ள 14 ஓடிடிகளின் சந்தா வசதியும், ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸில் 350க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கின்றன.

கடைசியாக, ஏர்டெலின் ரூ1,599 திட்டத்தில் 300Mbps வேகத்தில் அன்லிமிடெட் இணைய சேவையுடன், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், நெட்ஃபிளிக்ஸ் சப்ஸ்கிரிப்ஷன் கிடைக்கின்றன. முந்தைய திட்டங்களை போல், ஏர்டெல் எக்ஸ்-ஸ்டிரீம் பிரீமியம் சேவையில் 14 ஓடிடி சந்தாவும், ஏர்டெல் 4K ஹைப்ரிட் டி.வி. பாக்ஸில் 350க்கும் மேற்பட்ட சேனல்களும் கிடைக்கின்றன.

மேலும், ஏர்டெல் 4K ஹைப்ரிட் டிவி பாக்ஸுக்கு பயனர்கள் ஒரு முறை கட்டணமாக ரூ.2,000 செலுத்த வேண்டும். இதுதவிர, பிராட்பேண்ட் சலுகைகளுடன் 3333GB டேட்டா வழங்கப்படும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Tamil App.

Web Title: Airtel launches new broadband plans with unlimited internet ott subscriptions

Best of Express