Latest Airtel Add-On Packs Tamil News : ஏர்டெல் ரூ.250-க்கு கீழ் இரண்டு புதிய ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய ரூ.78 ஏர்டெல் டேட்டா பேக், 5 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இது பயனரின் அசல் ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாகும் வரை செல்லுபடியாகும். வழங்கப்பட்ட 5 ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் நிறுவனம் ஒரு எம்பிக்கு 50 பைசா வசூலிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த திட்டம் ஒரு மாத விங்க் பிரீமியம் சந்தாவையும் வழங்குகிறது.
ஏர்டெல் அறிமுகப்படுத்திய இரண்டாவது திட்டம் ரூ.248 ப்ரீபெய்ட் டேட்டா ஆட்-ஆன் திட்டம். இந்த பேக், விங்க் பிரீமியம் சந்தா மற்றும் மொத்தம் 25 ஜிபி டேட்டாவுடன் வருகிறது. புதிய டேட்டா-சேர்க்கைகள் தற்போது அதிகாரப்பூர்வ தளத்தில் பட்டியலிடப்படவில்லை. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் நிறுவனத்தின் மொபைல் பயன்பாட்டில் இந்த பேக்குகளை காணலாம். இந்த புதிய திட்டங்களை முதலில் ஒன்லிடெக் கண்டறிந்தது குறிப்பிடத்தக்கது.
விங்க் பிரீமியம் சந்தாவின் விலை மற்றும் நன்மைகள்?
நிறுவனத்தின் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டின் மூலம் ஒருவர் தனித்தனியாக விங்க் பிரீமியம் சந்தாவை வாங்கலாம். இது உங்களுக்கு மாத அடிப்படையில் ரூ.49 ஆகவும், ஆண்டு அடிப்படையில் ரூ.399-ஆகவும் செலவாகும். மெம்பர்ஷிப், பாடல்களைப் பதிவிறக்க அனுமதிக்கிறது. மேலும், அவற்றை ஆஃப்லைனிலும் பெற முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
இந்த சந்தாவை வாங்கியதும், அன்லிமிடெட் இசை மற்றும் பாட்காஸ்ட்களைப் பெறலாம். ஹலோ ட்யூன்களுக்கான அணுகலையும் மற்றும் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் காலர் ட்யூன்களையும் அமைக்கலாம். சந்தா வாங்குவது சேவையைப் பயன்படுத்தும் போது விளம்பரமில்லாத அனுபவத்தையும் உறுதி செய்கிறது.
ஏர்டெல்லின் பிற டேட்டா ஆட்-ஆன் திட்டங்கள்
ரூ.401 ப்ரீபெய்ட் டேட்டா திட்டமும் ஏர்டெல்லில் உள்ளது. இதில் மொத்தம் 30 ஜிபி டேட்டா அடங்கும். மேலும், 28 நாட்கள் செல்லுபடியாகும் காலத்துடன் வருகிறது. இந்த திட்டம் ஒரு வருடத்திற்கான டிஸ்னி + ஹாட்ஸ்டார் விஐபிக்கும் அணுகலை வழங்குகிறது. ரூ.251 டேட்டாத் திட்டத்தையும் ஏர்டெல் கொண்டுள்ளது. இது மொத்தம் 50 ஜிபி டேட்டாவுடன் அனுப்பப்படுகிறது. மேலும், உங்கள் தற்போதைய ப்ரீபெய்ட் பேக் காலாவதியாகும் வரை அது செல்லுபடியாகும்.
டேட்டா ஆட்-ஆன் பிக்குகளுக்கு அதிகம் செலவிட விரும்பவில்லை என்றால், ரூ.48 பேக் வாங்குவதைப் பரிசீலனை செய்யலாம். இது மொத்தம் 3 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. அடுத்ததாக ரூ.98 டேட்டா பேக் உள்ளது. இது மொத்தம் 12 ஜிபி டேட்டாவைக் கொடுக்கும்.
1 மாத அமேசான் ப்ரைம் சந்தா, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம், ஹலோ ட்யூன்ஸ், விங்க் மியூசிக் மற்றும் 100 எம்பி டேட்டாவை இலவசமாக வழங்கும் ரூ.131 டேட்டா பேக் வாங்குவதையும் பரிசீலனை செய்யலாம். சில பிராந்தியங்கள் வெவ்வேறு பேக்குகளை கொண்டிருப்பதால் இந்தத் திட்டங்கள் அனைவருக்கும் தெரியாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த திட்டங்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் அல்லது நிறுவனத்தின் ஏர்டெல் தேங்க்ஸ் பயன்பாட்டில் உள்ளதா என்பதை சரிபார்க்கலாம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"